Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ் காலமானார்! கலைஞர்கள் இரங்கல்..

    பிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ் காலமானார்! கலைஞர்கள் இரங்கல்..

    பிரபலமான ஓவியரும் எழுத்தாளருமான மனோகர் தேவதாஸ் இன்று சென்னையில் அதிகாலை இயற்கை எய்தினார். 

    மனோகர் தேவதாஸ் – ஓவியராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்ட இவர், கடந்த கடந்த 1936-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். பாரம்பரிய கட்டடங்களை வரைவதில் மனோகர் தேவதாஸ் கைதேர்ந்தவர். 

    மனோகர் தேவதாஸ் தனது 32-ஆவது வயதில் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா நோயால் பாதிக்கப்பட்டு பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. இதனின் விளைவாக அவரது 83-ஆவது வயதில் அவருக்கு கண் பார்வை முற்றிலுமாக பறிபோனது. இருப்பினும் தனது கலை வாழ்வைத், தனது கலைப்பணியை திறம்பட தொடர்ந்தார். 

    இந்நிலையில், தனது 86-ஆவது வயதில் மனோகர் தேவதாஸ் சென்னையில் இன்று அதிகாலை காலமானார். இவரின் மறைவுக்கு ஓவியர்கள், எழுத்தாளர்கள் உட்பட பல்வேறு கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற மனோகர் தேவதாஸ், கிரீன் வெல் இயர்ஸ், மல்டி ஃபேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை, நிறங்களின் மொழி, டிரீம்ஸ் போன்ற பல நூல்களையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடலூர் மாவட்ட மக்களுக்காக களத்தில் இறங்கி போராடத் தயார்! அன்புமணி ராமதாஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....