Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'மாணவிகளுக்கு பாய் ஃபிரண்ட் கட்டாயம்' - கல்லூரி பலகையில் ஒட்டிய நோட்டீஸால் சர்ச்சை!

    ‘மாணவிகளுக்கு பாய் ஃபிரண்ட் கட்டாயம்’ – கல்லூரி பலகையில் ஒட்டிய நோட்டீஸால் சர்ச்சை!

    காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் கட்டாயம் குறைந்தது ஒரு பாய் ஃபிரண்ட் ஆவது வைத்துக்கொள்ள வேண்டும் என கூறி கல்லூரி முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

    இந்நிலையில் ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் எஸ்விஎம் என்ற தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் அறிவிப்பு பலகையில் கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் ஒட்டப்பட்ட அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

    அங்கு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பில், காதலர் தினத்தன்று பிப்ரவரி 14 ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் குறைந்தது ஒரு பாய் பிரண்ட் கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுவதாகவும், பாய் பிரண்ட் இல்லாமல் தனியாக அவரும் மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதே சமயம், மாணவிகள் தங்கள் பாய் பிரண்ட் உடன் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை காட்ட வேண்டும் என்றும், அன்பை பரப்புங்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பின் கீழ் கல்லூரி முதல்வரின் கையொப்பமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதனைப் பார்த்த மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஆசிரியர்கள், முதல்வரிடம் தெரிவித்த நிலையில், தனது கையெழுத்தை யாரோ தவறாக பயன்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதோடு இந்தச் சம்பவம் குறித்து  கல்லூரி முதல்வர் காவல்துறையிடம் புகார் அளித்தார். 

    காவல்துறையினர் இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தலைநகர் தில்லியில் நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....