Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுரோஹித், சுப்மன் கில்லின் அதிரடி சதங்கள்; மளமளவென உயர்ந்த இந்தியாவின் ஸ்கோர்!

    ரோஹித், சுப்மன் கில்லின் அதிரடி சதங்கள்; மளமளவென உயர்ந்த இந்தியாவின் ஸ்கோர்!

    நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி  9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. 

    இந்நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.ஏற்கனவே மூன்று ஒருநாள் போட்டிக்கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிவிட்டது. இருப்பினும், இன்றைய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வொயிட் வாஷ் செய்யும் நோக்கத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. 

    இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால், இந்திய அணி பேட்டிங்கில் களம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவருமே சதமடித்தனர். 

    ரோஹித் சர்மா 101 ரன்களிலும், சுப்மன் கில் 112 ரன்களிலும் பெவிலியன் திரும்ப இதற்கு பிறகு வந்த இந்திய வீரர்கள் பெரியதாக சோபிக்கவில்லை. இவர்களை அடுத்து அதிகப்படியாக ஹர்திக் பாண்டியா 54 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் மொத்தத்தில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்களை எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது. 

    ‘மாணவிகளுக்கு பாய் ஃபிரண்ட் கட்டாயம்’ – கல்லூரி பலகையில் ஒட்டிய நோட்டீஸால் சர்ச்சை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....