Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்திமுக இதுவரை எந்த அறிவிப்பையும் நிறைவேற்றவில்லை -எடப்பாடி பழனிசாமி

    திமுக இதுவரை எந்த அறிவிப்பையும் நிறைவேற்றவில்லை -எடப்பாடி பழனிசாமி

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைப்பெற இருப்பதால், அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளன. 

    சென்னையில் அதிமுக சார்பாக வாக்கு சேகரிக்க, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். அங்கே அவர் பேசுகையில் திமுக அறிவித்த எந்த வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று அறிவித்தார்.

    eps stalin

    அதாவது கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குகளை சேகரிக்க பல அறிவிப்புகளை கூறி வந்தார்.  இந்த அறிவிப்புகள் மொத்தம் 525 எண்ணிக்கை கொண்டதாகும். இதனை தொடர்ந்து   மு.க. ஸ்டாலின் தேர்தலில் வெற்றிபெற்று 100வது நாள் கொண்டாடும் விழாவில் வாக்கு சேகரிப்பின் போது கூறிய அறிவிப்புகளில் 70 % சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

    stalin

     இதற்கு பதில் கூறும் விதமாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு நேற்று  வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லையென குற்றம் சாட்டியுள்ளார். 

    தேர்தலின் போது கூறப்பட்ட  எந்தவித அறிவிப்புகளையும் நிறைவேற்றப்படாத அரசாங்கம் திமுக அரசாங்கம் என்றும்,  எப்படி ஒன்னுமில்லாததை 525 அறிவிப்புகள் என்று கூறிவந்தாரோ அதேபோல் அதை நிறைவேற்றியதாகவும் பொய் பரப்புரை செய்து வருகிறார் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக தேர்தலின் போது அளித்த  வாக்குறுதிகளை  முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகவும்  கூறியுள்ளார்.

    மேலும் இந்த செய்தியை பற்றி  அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.https://www.dinavaasal.com/election-commission-released-local-body-elections-list/

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....