Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பதவி விவரப்பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பதவி விவரப்பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

    தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 12,826 இடங்களில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. தேதி அறிவித்ததிலிருந்து தேர்தல் களம் சூடுப் பிடிக்க தொடங்கியுள்ளன.

    election commissionஆளும் கட்சியாக இருக்கும்  திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்கிறது.

    local body electionஅதே நேரத்தில், அதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக, பாமக , பாஜக , நாம் தமிழர் கட்சி  உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை தனித்து சந்திக்கவிருக்கின்றன. 

     

    இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 57,778 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி என 12,826 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தமாக 74,383 வேட்புமனுக்கள் பெறப்பட்டதாவும், 2062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    tamilnadu state election commission

    மேலும், திரும்பப் பெறப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை 14,324 எனவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் 218 எனவும் இதனால், இறுதியாக தேர்தல் நடைபெறவுள்ள பதவியிடங்கள் 12,607 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 57,778 மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    election rulesமாநகராட்சி வார்டு- 11,196 நகராட்சி வார்டு- 17,922 பேரூராட்சி வார்டு – 28,660 என்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பதவி விவர பட்டியலை  வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை வேட்பாளர்கள் திரும்பப்பெற நேற்றே கடைசி நாள் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....