Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க இதோ வாய்ப்பு!

    தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க இதோ வாய்ப்பு!

    ஷாஜஹானின் 368-ஆவது நினைவு தினத்தையொட்டி,  தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    முகலாய சாம்ராஜியத்தின் மன்னர் ஷாஜகானின் 368-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி  வரும் 17 முதல் 19- ஆம் தேதி வரையில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை நுழைவுக் கட்டணமில்லாமல் இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என தொல்லியல் ஆய்வுத் துறை சார்பில் தெரவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், பிப்ரவரி 17, 18 ஆம் தேதிகளில் மதியம் 2 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க கட்டணம் வசூலிக்கப்படாது என்றும்,  பிப்ரவரி 19 ஆம் தேதி நாள் முழுவதும் இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வருகிற 17,18-ஆம் தேதிகளில் ஷாஜஹானின் அடக்கஸ்தலத்தில் சந்தனம், மலர்கள், போர்வைகள் வைப்பது போன்ற வழக்கமான நடைமுறைகள் நடைபெறும். மேலும், 19-ஆம் தேதி 1,880 மீட்டர் நீளம் போர்வை ஷாஜஹானின் அடக்கஸ்தலத்தில் போர்த்தப்படும். 

    இதுமட்டுமல்லாமல், இந்த மூன்று தினங்களில் மட்டும் தாஜ்மஹாலுக்கு கீழே வைக்கப்பட்டுள்ள ஷாஜஹான், மும்தாஜின் அடக்கஸ்தலத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும், ஷாஜஹான், மும்தாஜை போற்றி கவாலி பாடல்களும் பாடப்படும். 

    ‘ரஞ்சித் தடம் மாற வேண்டாம்’ – இயக்குநர் மோகன்.ஜி பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....