Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்குறி வச்சு அடிக்கும் ஏவுகணை; உக்ரைனுக்கு பரிசளித்த இங்கிலாந்து! - அடுத்த கட்டம் என்ன?

    குறி வச்சு அடிக்கும் ஏவுகணை; உக்ரைனுக்கு பரிசளித்த இங்கிலாந்து! – அடுத்த கட்டம் என்ன?

    நீண்ட தொலைவிற்கு அப்பால் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் நாட்டிற்கு இங்கிலாந்து கொடுக்க முன்வந்துள்ளது. இம்மாதிரியான ஏவுகணைகளை உக்ரைன் நாட்டிற்கு அளித்தால் போர் இன்னும் உக்கிரமடையும் என்று ரஷ்யா அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது இங்கிலாந்து எடுத்திருக்கும் இந்த முடிவு அடுத்து என்ன நிகழும் என்கிற பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    உக்ரைன்-ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் நூறு நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த ரஷ்யா, நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதால் தங்களது பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படலாம் என்று முன்னமே கூறியிருந்தது.

    இருப்பினும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு முயற்சிகள் எடுத்ததால் இந்த போரினை ரஷ்யா தொடுத்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெறும் இந்த போரனது உக்ரைன் நாட்டில் பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    நாட்டின் பல பகுதிகளும் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன. உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு நாட்டினைச் சேர்ந்தவர்களும் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். உக்ரைனிற்கு உலகின் பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றன.

    கடந்த ஒரு சில வாரங்களாக போர் பதற்றம் சற்று குறைந்த நிலையில், தற்போது இங்கிலாந்து, உக்ரைனிற்கு தொலை தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை அளிக்க முன்வந்துள்ளது சற்று பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து ஏற்கனவே பேசி இருந்த ரஷ்யா அதிபர் புதின், ‘உக்ரைன் நாட்டிற்கு தொலை தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வேறு நாடுகள் அளித்தால், புதிய ராணுவ இடங்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு அவைகள் அழிக்கப்படும்.’ என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில், இங்கிலாந்து, ரஷ்யாவின் எச்சரிக்கையினை மீறி உக்ரைனிற்கு உதவ முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா அதிபரின் எச்சரிக்கைக்கு பிறகு பேசியிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நாட்டிற்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் வழங்குவது பற்றி எண்ணம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

    உக்ரைன்-ரஷ்யாவின் இந்த போரனது அந்த இரண்டு நாடுகளை மட்டுமல்லாது, உலக வர்த்தகத்தினையே பெரும் இக்கட்டுக்குள் தள்ளியுள்ளது. கோதுமை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடான உக்ரைனில் போர் நிலவுவதால் உலகெங்கும் கோதுமை தட்டுப்பாடு பெருமளவில் நிலவி வருகிறது. ரஷ்யா மீது பல நாடுகளும் பொருளாதாரத் தடை விதித்து உள்ளன. இதன் காரணமாக ரஷ்யா நாணயமானது வரலாற்றில் இல்லாத அளவிற்கு சரிவினைச் சந்தித்து உள்ளது. 

    கச்சா எண்ணெய் விலை உயர்வும், உலக அளவில் பொருளாதார வீழ்ச்சியும், பணவீக்கமும் இந்த போரினால் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் இந்த முடிவு போரின் உக்கரத்தினை அதிகரிக்கச் செய்யுமோ என்கிற கேள்வியினை அனைவரது மனத்திலும் விதைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் கணினியின் செயல்பாட்டு நலனில் ஆர்வமாக உள்ளீர்களா? சரி! அப்போ இதைப் படியுங்க!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....