Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு ரோமானியாவில் வேலைவாய்ப்பு! ஆலோசனை நடத்திய ரோமானிய தூதர்

    திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு ரோமானியாவில் வேலைவாய்ப்பு! ஆலோசனை நடத்திய ரோமானிய தூதர்

    இந்திய நாட்டிற்கான ரோமானியா நாட்டுத் தூதர் டேனியலா மரியானா செகனோவ் டானே புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார்.

    புதுச்சேரி வந்துள்ள இந்திய நாட்டிற்கான ரோமானியா நாட்டுத் தூதர் டேனியலா மரியானா செகனோவ் டானே சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார். அப்போது அடுத்த வரும் அலையன்ஸ் பிரான்ஸிசுடன் இணைந்து நடத்த உள்ள ரோமானிய திரைப்பட விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.

    அதேபோல் வேளாண்மை, விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகளில் படித்து முடித்த அனுபவமுள்ள புதுச்சேரியை சேர்ந்த திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு ரோமானியாவில் வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பாகவும் முதலமைச்சருடன் கலந்துரையாடினார்.

    மேலும் குறைந்த செலவில் ரோமானியாவில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவை தலைவர் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரிக்கான ரோமானியா நாட்டுத் துணைத் தூதர் விஜய் மேத்தா மற்றும் சென்னை ரோமானிய தூதரக வர்த்தக அதிகாரி ஹுக் குருஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    “புதுச்சேரியின் செல்ல மகள்” யானை லக்ஷ்மி உயிரிழந்த இடத்தில் 1200 கிலோ எடையுள்ள நினைவு கற்சிலை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....