Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து உலகக் கோப்பை: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து

    கால்பந்து உலகக் கோப்பை: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து

    கால்பந்து உலகக் கோப்பையின் அடுத்தச் சுற்றுக்கு சுவிட்சர்லாந்து அணி முன்னேறியது.

    நடப்பாண்டிற்கான சர்வேதேச கால்பந்து உலகக் கோப்பை போட்டி கத்தாரில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. 

    இந்நிலையில், குரூப் ஜியில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் செர்பியா அணிகளுக்கும், கேமரூன் மற்றும் பிரேசில் அணிகளுக்கும் இடையிலான ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. 

    சுவிட்சர்லாந்து மற்றும் செர்பியா

    இந்த ஆட்டத்தின் முதல் 20-ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி வீரர் ஷாகிரி ஒரு கோல் அடிக்க, இதைத்தொடர்ந்து, 26-ஆவது நிமிடத்தில் செர்பியா அணியைச் சார்ந்த மைட்ரோவிக் கோல் அடிக்க, 35-ஆவது நிமிடத்தில் அதே அணியைச் சார்ந்த விலாஹோவிக் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம், 2-1 என்ற கணக்கில் செர்பியா முன்னிலை வகிக்க, 44-ஆவது நிமிடத்தில் எம்போலோ ஒரு கோலும் அடித்து சுவிட்சர்லாந்து முதல் பாதியை சமன் செய்தார்.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஃப்ரீலர் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 

    இதன் மூலம் சுவிட்சர்லாந்து அணி 3:2 என்ற கோல் கணக்கில் செர்பரியா அணியை வென்றது. இந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

    பிரேசில் மற்றும் கேமரூன்

    இந்த ஆட்டமானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு அணி வீரர்களும் தங்களது அணிக்காக கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. 

    இருப்பினும், ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 90+2 கூடுதல் நேரத்தில் கேமரூன் வீரர் அபூப்பக்கர் ஒருகோல் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 

    இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் பிரேசில் அணியை கேமரூன் அணி வென்றது. இருப்பினும் பிரேசில் அணி முன்னதாக அடுத்தச்சுற்றுக்கு தகுதி பெற்றதால், கேமரூன் ஆட்டத்தை விட்டு வெளியேறியது. 

    குள்ளநரி கூட்டம் படத்தில் நடித்த துணை நடிகர் காலமானார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....