Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்குள்ளநரி கூட்டம் படத்தில் நடித்த துணை நடிகர் காலமானார்..

    குள்ளநரி கூட்டம் படத்தில் நடித்த துணை நடிகர் காலமானார்..

    ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தில் துணை நடிகராக நடித்த ஹரி வைரவன் இன்று காலமானார். 

    ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘குள்ளநரி கூட்டம்’ ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தவர், ஹரி வைரவன். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற திரைப்படங்களில் பெரிதும் பேசப்பட்டாலும், இவருக்க பட வாய்ப்புகள் பெரியதாக அமையவில்லை. 

    வறுமையில் வாடிய ஹரி வைரவனுக்கு சமீபத்தில் உடல்நிலை மோசமானது. இதை அவரே ஒரு காணொளி மூலம் தெரிவித்திருந்தார். இதய நோய், சீறுநீரக செயலிழப்பு போன்றவற்றால், தன் உயிருக்கு மருத்துவர்கள் காலக்கெடு தந்துள்ளதாகவும், தன் பிள்ளை மற்றும் மனைவியை யார் காப்பாற்றுவார் என்றும் அந்த காணொளியில் தெரிவித்திருந்தார். பொருளாதர ரீதியாக வறுமையில் வாடிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

    இதைத்தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் உட்பட சிலர் நிதியுதவி அளித்தனர். இதன்பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். உடல் நலம் தேறிவிடுவார் என ஹரி வைரவனின் மனைவி தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், ஹரி வைரவன் நள்ளிரவு 12.15 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் கடச்ச நேந்தலில் இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

    அழைக்காத திருமணத்திற்கு சென்று உணவு சாப்பிட்ட எம்பிஏ மாணவருக்கு நேர்ந்த சோகம் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....