Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதேர்தலில் போட்டியிடாத கட்சிகளுக்கு எச்சரிக்கை.. தேர்தல் ஆணையம் போட்ட புதிய கிடுக்கிப்பிடி

    தேர்தலில் போட்டியிடாத கட்சிகளுக்கு எச்சரிக்கை.. தேர்தல் ஆணையம் போட்ட புதிய கிடுக்கிப்பிடி

    6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள்  பதிவுப்பட்டியலில் இருந்து நீக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றன. சில கட்சிகள் முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வகித்து தேர்தலைச்  சந்திக்கின்றன. அப்படி கூட்டணி வாய்ப்பில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பெரும்பாலும் தோல்வியையே தழுவுகின்றன. இதனால், சில கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து வருகின்றன. அப்படி தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை நீக்குவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

    இதையும் படிங்க: ‘அமைச்சருக்கே மின்வெட்டு ‘ கடுப்பான துரைமுருகன் – பலியாக்கப்பட்ட ஊழியர்கள்

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் நாடு முழுவதும் உள்ளன. 

    அதேபோல், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796 கட்சிகளில் வெறும் 636 கட்சிகள் மட்டுமே கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் களம் இறங்கின. 

    இதனிடையே, கட்சிகள் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து, உரிய விசாரணை நடத்தி அதனடிப்படையில், பல்வேறு மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் கட்சிகளை பதிவு செய்தும், அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளைப் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. 

    அதுமட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிமுக அலுவலகம் தொடர்பான வழக்கு – சிபிசிஐடி- க்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....