Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக அலுவலகம் தொடர்பான வழக்கு - சிபிசிஐடி- க்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

    அதிமுக அலுவலகம் தொடர்பான வழக்கு – சிபிசிஐடி- க்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

    முன்னாள் முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

    கடந்த ஜூலை 11 ஆம் தேதி வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெற்றது. ஆனால் அன்றைய தேதியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை. மேலும் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தலைமை கழகம் சென்றார்கள்.

    ஆனால் திரு.எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் அடியாட்களுடன் எங்களை தாக்கினார்கள்.மேலும் கட்சியின் முக்கியமான ஆவணங்கள் தலைமை கழகத்தில் இருந்தது. நடைபெற்ற தாக்குதல் காரணமாக ஆவணங்கள் மற்றும் பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பு ஒருங்கிணைப்பாளருக்கு உள்ளது. அதன் அடிப்படையில் தொண்டர்கள் ஆவணங்களை பாதுகாப்பான முறையில் ஒருங்கிணைப்பாளர் வாகனத்தில் கொண்டுவந்து வைத்தனர்.

    உண்மை நிலை இவ்வாறு இருக்க ஆவணங்களை கொள்ளை அடித்ததாக எங்கள் மீது கொடுக்கப்பட்ட புகாரை உடனடியாக பதிவு செய்த காவல் துறை ,நாங்கள் தந்த புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. எனவே எங்கள் புகாரை ஏற்று தகுந்த விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் தலைமை கழகத்தில் உள்ள வீடியோ பதிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து .

    காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துவதே ஆளுங்கட்சியின் வேலை – ஜெயக்குமார் காட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....