Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉத்தரகண்ட் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்..

    உத்தரகண்ட் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்..

    உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசி பகுதியில் இன்று அதிகாலை 1.50 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 3.1 ஆகப் பதிவாகியுள்ளது. 

    தமிழரின் பண்பாடு பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு! தமிழக அரசு விளக்கம்

    நிலநடுக்கம் குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,

    உத்தர்காசியில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 24 கிலோமீட்டர் தொலைவிலும் பூமிக்கடியில் 5 கிமீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது மையம் கொண்டிருந்தது என்று தெரிவித்துள்ளது. 

    மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, நவம்பர் மாதம் உத்தராகண்ட்டில் உள்ள டெஹ்ரி என்கிற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகியது குறிப்பிடத்தக்கது. 

    குழந்தைகளுக்கு 10 கிலோ புத்தகப்பை வேண்டாம்: சுமையில்லாத சுகமான கல்வி தரும் கொள்கை தேவை! மருத்துவர் ராமதாஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....