Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அரசியல் செய்வது அண்ணாமலை தான், முதல்வர் அல்ல - துரை வைகோ!

    அரசியல் செய்வது அண்ணாமலை தான், முதல்வர் அல்ல – துரை வைகோ!

    தமிழக அரசியல் களத்தில், நாள்தோறும் ஆளுங்கட்சியை மற்ற கட்சிகள் விமர்சித்து வருவது வாடிக்கையாகி விட்டது. எதிர்வரும் விமர்சனத்திற்கு, ஆளுங்கட்சி பதிலடி கொடுப்பதும் வழக்கம் தான். இப்படியான சூழலில், நேற்று பிரதமர் மோடி சென்னைக்கு வருகை புரிந்திருந்தார்.

    சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புமிக்க உட்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். அப்போது, விழா மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு தமிழகத்திற்குத் தேவையான 5 கோரிக்கைகளை வைத்தார்.

    இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ. அதில், நேற்று தமிழக முதல்வர் அரசியல் பேசவில்லை என்றும், தமிழர்களுக்கு தேவையான கோரிக்கைகளை தான் பேசி இருக்கிறார் என்றும் தெரிவித்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தான் அரசியல் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துரை வைகோவின் இந்த அரசியல் விமர்சனம், பா.ஜ.க.,வினரை கோபமடையச் செய்துள்ளது.

    கடந்த முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது, நீட் தேர்வு உள்பட பல பிரச்னைகள் இருந்ததது. அதனால் தான் பிரதமர் வருகை புரிந்த போது, கருப்பு பலூன்களை பறக்க விட்டோம். இந்த முறை தமிழ்நாட்டிற்குத் தேவையான திட்டங்களை தொடங்கி வைக்க வந்ததால் பிரதமர் மோடியை வரவேற்கிறோம் என்றார் துரை வைகோ. பிரதமரின் சென்னை வருகையால், தமிழகத்திற்கு பல திட்டங்கள் நன்முறையில் நிறைவேறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    மேலும் அவர் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கையில் அமித்ஷா ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தி மொழி என தெரிவித்திருந்தார். இந்த தேசிய கல்விக் கொள்கைகளும் அதையேத் தான் கூறியிருக்கிறது. தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்பட்டால், ஒன்று அந்தந்த மாநில மொழி இருக்கும். மற்றொன்று ஆங்கில மொழிக்கு பதிலாக ஹிந்தி மொழி இருக்கும். சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரை பிரச்சினைகள் ஏதும் நிகழாமல் முதல்வரும், சைலேந்திரபாபுவும் மிகச் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார் துரை வைகோ.

    மக்கள் மீது கொலைவெறி தாக்குதல்; கைது செய்யப்படுவாரா ராஜபக்சே?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....