Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இந்திய இளைஞருக்கு லாட்டரியில் அடித்த ஜாக்பாட்; இவ்வளவு பெரிய தொகையா?

    இந்திய இளைஞருக்கு லாட்டரியில் அடித்த ஜாக்பாட்; இவ்வளவு பெரிய தொகையா?

    துபாயில் பணிபுரியும் இந்திய இளைஞர் ஒருவருக்கு ரூ.33 கோடி ஜாக்பாட் அடித்துள்ளது. 

    துபாயில் பணிபுரிந்து வரும் இந்திய இளைஞர்களில் ஒருவர், அஜய் ஓகுலா. இவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த நான்கு ஆண்டுகளாக துபாயில் இவர் பணிபுரிந்து வருகிறார். 

    தற்போது, அஜய் ஓகுலா ஒரு நகைக் கடையில் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு மாத ஊதியம் 3200 திர்ஹம். இந்திய ரூபாயில் 72000. இவர் எமிரேட்ஸ் ட்ரா  லாட்டரி டிக்கெட் ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார். இந்த லாட்டரியில் அஜய் ஓகுலாவுக்கு பரிசு கிடைத்தது. 

    அவருக்கு 15 மில்லியன் அராப் எமிரேட்ஸ் தினார் பரிசாகக் கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.33 கோடி ஆகும். இந்திய இளைஞருக்கு அடித்த இந்த ஜாக்பாட் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.  

    இது குறித்து அஜய் ஓகுலா தெரிவித்துள்ளதாவது;

    நான் லாட்டரியை வாங்கும்போது இவ்வளவு பெரிய ஜாக்பாட் அடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் 2 டிக்கெட்டுகளை எமிரேட்ஸ் லக்கி ட்ரா கம்பெனியில் இருந்து வாங்கினேன்.

    நான் வாங்கிய டிக்கெட்டுக்கு 15 மில்லியன் அராப் எமிரேட்ஸ் தினார் பரிசாகக் கிடைத்துள்ளது. இதை எனது குடும்பத்தினர் யாரும் நம்பவில்லை. இப்போது செய்திகளில் என்னைப் பற்றிய தகவல் வெளியானதால் அவர்கள் நம்புகின்றனர். 

    இதை வைத்து எனது சொந்த ஊரிலும் அருகிலுள்ள கிராமங்களிலும் நலிந்தோருக்கு நிறைய தான தர்மங்களைச் செய்வேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....