Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகேரள நரபலி வழக்கில் இன்னும் 2 வாரங்களில் அரசு தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    கேரள நரபலி வழக்கில் இன்னும் 2 வாரங்களில் அரசு தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    கேரள நரபலி வழக்கில் இன்னும் 2 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக கேரள அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த போலி மந்திரவாதியான முகமது ஷமி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகிய மூன்று பேர் தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட 2 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

    இதையடுத்து, அந்த மூன்று பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, பகவல் சிங்கின் மனைவியான லைலா, தனக்கு ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார். 

    இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து லைலாவுக்கு ஜாமீன் வழங்க கேரள அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். 

    மேலும், இந்த இரட்டை நரபலி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வருவதாகவும், இன்னும் 2 வாரங்களில் அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் கேரள அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

    ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....