Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமருந்து உற்பத்தி தரத்தை மதிப்பீடு செய்ய 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்

    மருந்து உற்பத்தி தரத்தை மதிப்பீடு செய்ய 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்

    மருந்து உற்பத்தியின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கென 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இருப்பதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. 

    நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மற்றும் மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

    மற்றொருபுறம் மருந்துகளின் மூலக்கூறு, உற்பத்தியை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வகங்களுக்கும் அவ்வப்போது அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 105 ஆய்வகங்களுக்கு அத்தகைய அங்கீகாரம் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த ஆய்வகங்கள் மூலம் சோதனைகள் நடத்தப்படும்.

    மருந்து உற்பத்தி நடவடிக்கைகள், மூலக்கூறு விகிதங்களில் மாறுபாடு இருப்பினும், தரக் குறைபாடு இருப்பினும் அந்த ஆய்வகங்கள் மூலம் அவை மதிப்பீடு செய்யப்படும். மேலும் இதன் அடிப்படையில் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 

    அறிஞர் அண்ணாவின் நினைவு நினைவுநாள்; மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....