Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி ஓட்டுநரும், நடத்துநரும் இதை செய்தாக வேண்டும் - அரசு அதிரடி உத்தரவு!

    இனி ஓட்டுநரும், நடத்துநரும் இதை செய்தாக வேண்டும் – அரசு அதிரடி உத்தரவு!

    அரசு விரைவு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பயணிகள் தங்கும் அறையிலேயே தங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் இருந்து தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள், பயணிகள் உணவு உண்ணவும், இயற்கை உபாதை கழிக்கவும் பயணவழியில் உள்ள மோட்டல்களில் நிறுத்தப்படுகின்றன.

    அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டல்களில் மட்டுமே அரசு விரைவு பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டல்களில் உணவு தரம், கழிப்பறை வசதி, சுகாதாரம் போன்றவை முறையான வகையில் பயணிகளுக்கு கிடைக்கிறதா என்பது கேள்வி குறியாகவே உள்ளது. மேலும் இது தொடர்பாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    அதே சமயம், ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் தனி அறையில் உணவு வழங்கப்படுவதாகவும் அவர்களுக்கு மட்டும் சிறப்பான கவனிப்பு இருப்பதால், அவர்கள் தரமற்ற மோட்டல்களில் பேருந்துகளை நிறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பயணிகள் தங்கும் அறையிலேயே தங்கவும் உண்ணவும் வேண்டும் என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....