Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா vs ஆஸ்திரேலியா: தொடங்கியது இரண்டாவது டெஸ்ட் போட்டி!

    இந்தியா vs ஆஸ்திரேலியா: தொடங்கியது இரண்டாவது டெஸ்ட் போட்டி!

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தில்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. 

    ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

    இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 

    இதைத்தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தில்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. 

    இதையடுத்து, அந்த அணி சார்பில் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் க்வாஜா களமிறங்கியுள்ளனர். மேலும், இந்தப் போட்டி இந்திய வீரர் புஜாராவுக்கு 100-வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....