Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்?

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்?

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றித்திரைப்படங்களை தந்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக தற்சமயம் திகழ்ந்து வருகிறார். இவருக்கென ஒரு ரசிக கூட்டம் தற்போது உருவாகியுள்ளது. 

    விக்ரம் படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்சமயம் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 

    பான்-இந்தியா படமாக உருவாகி வரும் லியோவில், அர்ஜூன், த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் போன்றோர் நடித்து வருகின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

    வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள லியோ படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்ததும் லோகேஷ் கனகராஜூடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. 

    விதிகளை மீறி மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....