Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாடாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாகும் அபாயம்!

    டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாகும் அபாயம்!

    இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2,563 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. 

    வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசம் ஆகும். 

    இந்தியாவில் ஜூன் மாத ஏற்றுமதி 16.8 சதவிகிதம் அதிகரித்து 3,790 கோடி அமெரிக்க டாலராக இருக்கிறது. மேலும் இது இதுவரை இல்லாத அதிகபட்ச ஏற்றுமதி ஆகும். அதேபோல், இறக்குமதி 51.02 அதிகரித்து 6,358 கோடி அமெரிக்க டாலராக உள்ளது. 

    இந்தியாவின் சரக்கு ஏற்றுமதியானது 2022-23 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 22.2 சதவிகிதம் அதிகரித்து 11,670 கோடி அமெரிக்க டாலராக இருக்கிறது. இது முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஏற்றுமதி ஆகும். 

    மேலும் முதல் காலாண்டில் பெட்ரோலியம் அல்லாத ஏற்றுமதி 11.9 சதவிகிதம் அதிகரித்து 9,250 கோடி அமெரிக்க டாலராக உள்ளது. பெட்ரோலிய பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள் உள்ளிட்டவைகள் முதல் காலாண்டின் ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 

    2022-23 ஆண்டில் ஏப்ரல்- ஜூன் மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை 7,025 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. மே மாதத்தில் இருந்ததைவிட, ஜூன் மாதத்தில் ஏற்றுமதி அளவு குறைந்தும் இறக்குமதி அளவு அதிகரித்தும் காணப்பட்டது. 

    இதன் காரணமாக, 2-ம் காலாண்டில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 80 முதல் 81 ஆக பலவீனம் அடைய வாய்ப்புள்ளது என்று, இந்தியாவின் முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் கூறுகையில், “அரசாங்கத்தின் சமீபகால நடவடிக்கைகள் , குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி ஆகியவற்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கில் ஏற்படும் பற்றாக்குறை 3 சதவிகிதத்தை தாண்டுவதை தடுக்க உதவும். இருப்பினும், இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவது, நடப்பு கணக்கில் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற கவலைகளை ஏற்படுத்துகிறது. 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....