Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இசை மருத்துவருக்கே டாக்டர் பட்டம்..! மோடி, ஸ்டாலின் முன்னிலையில் பிரமாண்ட விழா

    இசை மருத்துவருக்கே டாக்டர் பட்டம்..! மோடி, ஸ்டாலின் முன்னிலையில் பிரமாண்ட விழா

    திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் நிலவி வரும் இந்த நிலையில், இவ்விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டுமானால் அனைவர் முன்பாகவும் கோரிக்கை வைத்தார்.

    இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘வணக்கம்’ எனக்கூறி தமிழில் தனது உரையை ஆரம்பித்தார். பிரதமர் மோடி, கிராம வளர்ச்சி, விவசாயம், இளைஞர்கள், கதர் துறை உள்ளிட்டவை குறித்து பேசினார்.

    இதுகுறித்து விரிவாக பேசிய அவர், காந்தியின் குறிக்கோள் கிராமப்புற வளர்ச்சிதான். நீண்ட காலத்திற்கு கதர் புறக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அது சர்வதேச ஆடையாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்டுகாலமாக, கதர் விற்பனை 300 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் இந்த விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதை அடுத்து இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

    முன்னதாக பிரதமர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி காந்திகிராம பல்கலைக்கழகம் வரும் வரை ஏராளமான பொதுமக்களும், பாஜகவினரும் ஆதரவு தெரிவித்தனர். பிரதமர் மோடி அவர்களுக்கு கையசைத்து பதிலளித்தார்.

    மேலும் சுமார் 14 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பிரதமர் மோடிக்கு வழி முழுவதும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு; நளினி உட்பட 6 பேர் விடுதலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....