Friday, May 3, 2024
மேலும்
    Homeஅறிவியல்இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் எப்போது தெரியுமா..? இந்தியாவில் எங்கு பார்க்கலாம்..?

    இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் எப்போது தெரியுமா..? இந்தியாவில் எங்கு பார்க்கலாம்..?

    இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

    சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரணங்கள் நிகழ்கின்றன.

    சந்திர கிரகணம் என்றால் என்ன?

    நிலவுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. 

    முழு சந்திர கிரகணம் என்றால் என்ன? 

    பூமியில் இருந்து நிலவும் சூரியனும் நேர் கோட்டில் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்பொழுது முழு சந்திர கிரகணம் (Total Lunar Eclipse) நிகழும். 

    பகுதி சந்திர கிரகணம் என்றால் என்ன?

    பூமியுடைய நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும்பொழுது பகுதி சந்திர கிரகணம் (Partial Lunar Eclipse) நிகழும்.

    புறநிழல் (umbra) சந்திர கிரகணத்தின் பொழுது, சூரியன்-பூமி-நிலவு ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதில்லை. 

    அதேபோல், சூரியன்-பூமி-நிலவு ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் சமயம் பூமியின் உள்நிழல் (penumbra) நிலவின் மீது விழுகிறது. இதனால் நிலவு மறைகிறது. இதனைச் சந்திர கிரகணம் என்கிறோம்.

    உலகின் பல பகுதிகளில் கடந்த 25 ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் தெரிந்தது. இந்நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி நிகழ இருக்கிறது. இது முழு சந்திர கிரகணமாக இருக்கும். அதாவது பூமியின் உள்நிழல் (penumbra) நிலவின் மீது விழுவதால் நிலவு மறைப்படும். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 15 மற்றும் 16 தேதி நள்ளிரவில் ஏற்பட்டது.

    இதையும் படிங்க: “நிச்சயம் அவள் செய்திருக்க மாட்டாள்”சாகும் தருவாயிலும் காதலிக்காக பேசிய காதலன்: திட்டமிட்டு கொலை செய்தது எப்படி?

    முழு சந்திர கிரகணம் எவ்வாறு காட்சியளிக்கும்?

    முழு சந்திர கிரகணம் நிகழும்பொழுது சந்திரன் ரத்த நிலவாக காட்சி தரும். அதாவது சிவப்பு நிறத்தில் நாம் சந்திரனைக் காணலாம். 

    The Next Lunar Eclipse: Night Of The Red Moon! - Farmers' Almanac - Plan Your Day. Grow Your Life.

    நிலவு ஏன் சிவப்பு நிறமாக காட்சியளிக்கும்?

    சந்திர கிரகணத்தின் பொழுது சந்திரனை அடையும் சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக பயணம் செய்வதால் நிலவானது சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது. சந்திர கிரகணம் நிகழும் சமயம், சூரிய உதயம் மற்றும் மறையும் பொழுது அதன் ஒளி நிலவின் மீது எதிரொளிக்கும். அதனால் நிலவு ரத்த நிறத்தில் கண்களுக்கு தெரிகிறது. இதனை ஆங்கிலத்தில் சூப்பர் பிளட் மூன் (Super Blood Moon) என்று அழைப்பர். 

    வெறும் கண்களால் காண முடியுமா?

    இந்த முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் காண முடியும். இதற்கு என்று தொலைநோக்கி தேவையில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    இந்திய நேரப்படி எப்போது பார்க்கலாம்? 

    நவம்பர் 8 ஆம் தேதி நிகழும் சந்திர கிரகணத்தை இந்திய நேரப்படி பிற்பகல் 02.48 முதல் மாலை 6.19 மணி வரை நிகழும்.

    எந்தெந்த நாடுகளில் இதைக் காண முடியும்?

    இந்தச் சந்திரக் கிரகணத்தை வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா போன்ற பகுதிகளிலும், பசிபிக், அட்லாண்டிக், இந்திய மற்றும் ஆட்ரிக் பெருங்கடல் பகுதிகளும் காண முடியும். 

    Blood moon – News, Research and Analysis – The Conversation – page 1

    இந்தியாவைப் பொறுத்தவரையில் கொல்கத்தா உள்பட கிழக்கு பகுதிகளில் மட்டுமே இதனைக் காண முடியும். மற்றப் பகுதிகளில் பகுதி சந்திரக் கிரகணத்தை மட்டுமே காண முடியும். 

    அடுத்த சந்திர கிரகணம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி நிகழ உள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....