Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகனால் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; பெற்றோர் செய்த காரியத்தால் பரபரப்பு…

    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகனால் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; பெற்றோர் செய்த காரியத்தால் பரபரப்பு…

    பாலியல் ரீதியாக தனது மகளை துன்புறுத்தியதாக திமுக ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சிறுமியின் தாய் தெய்வானை மற்றும் சிறுமியின் சகோதரன் இருவரும் தீ குளிக்க முயன்றுள்ளனர். 

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே  உள்ள இருக்கங்குடி கிராமத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திமுக ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் சுலைமான் என்பவர் மீது புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அச்சிறுமியின் தாய் தெய்வானை மற்றும் இவரின் மகன் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சித்துள்ளனர். அப்போது தெய்வானை பெட்ரோல் ஊற்றிக்கொண்டதும் அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.   

    இருக்கங்குடி கிராமத்தில் வசித்து வரும் தெய்வானை என்பவரின் மகளுக்கும், அதே ஊரில் வசிக்கும் ஊராட்சி மன்றத் தலைவர், செந்தாமரை என்பவரின் மகன் சுலைமானுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. சுலைமான் அச்சிறுமிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதன் மூலம் அவருக்கு சுலைமான் பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அச்சிறுமியை கண்டித்து, அந்த செல்போனை வாங்கி வைத்துள்ளனர். மேலும் அந்த செல்போனை சுலைமானிடம் கொடுப்பதற்காக அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது செந்தாமரை மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அவர்களை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. 

    இதனால் தெய்வானை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தீடிரென பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தாயும் மகனும் நீதி வேண்டும் என்று போராடினர். அப்போது தெய்வானைக்கு வலிப்பு ஏற்பட்டதும், அங்கு அப்போது பணியில் இருந்த காவல் துறையினர், அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. 

    ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பதால், தங்கள் பிள்ளைக்கு தொந்தரவு கொடுத்தவனின் மீது புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பெற்றோர் தீக்குளிக்கும் முடிவை எடுத்துள்ளனர். 

    இதையும் படியுங்கள், திருநீறு பூசி பள்ளி வந்ததால் கேளிக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி; ஆசிரியர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....