Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ கூறிய சர்ச்சைக் கருத்து ; அதிமுக எதிர்ப்பு!

    சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ கூறிய சர்ச்சைக் கருத்து ; அதிமுக எதிர்ப்பு!

    தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை இதுவரை ஆளுநர் தான் நியமித்து வந்தார்.

    ஆனால், அந்த அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று திமுக அரசு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த புதிய சட்டமசோதா, துணைவேந்தர்களை ஆளும் மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும்.

    ஆளுநர் தான், கடந்த சில ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ளார். அவரே, துணைவேந்தர்களை தேர்வு செய்து நியமித்த காரணத்தால், பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே, ஆளுநர் ஆர். என். ரவிக்கும் திமுக-விற்கும் இடையே மனக்கசப்பு இருப்பதால், இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்பதல் அளிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி, சட்டமசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். கர்நாடகா, குஜராத், மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரமானது, ஆளும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அதைப் போலவே தமிழகத்திலும், ஆளும் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் அளிக்கும் வகையிலான தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தில், தேவையான திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான சட்டமுன்வரைவைத் தாக்கல் செய்வதாக சட்டப்பேரவையில், அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

    சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை பேசினார். அப்போது அவர் மறைந்த முன்னாள் முதல்வர் பெயரைக் குறிப்பிட்ட கருத்துக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனை அடுத்து, முன்னாள் முதல்வர் பெயரை அவையில் கூறக்கூடாது என்று கூறி, அக்கருத்தை அவைக் குறிப்பிலிருந்து முற்றிலும் நீக்குவதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மேலும், பழையவற்றை சாட்சிக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும், இப்பொழுது இந்த அவையில் நாகரிகமாக பேசுங்கள் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

    இருப்பினும், அதிமுகவினர் தொடர்ந்தும் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து, கூச்சலிட்டதால் சட்டப்பேரவையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க; நெல்சன் திலீப்குமார் மீது கொட்டப்பட்ட எதிர்மறைக் கருத்துக்கள்; முற்றுப்புள்ளி வைத்த தளபதி விஜய்! வசூலும் மாஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....