Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கொலையாளிகளை ஹிரோக்களாக ஆக்காதீர்கள் - திமுக எம்.பிக்கு கார்த்தி சிதம்பரம் ட்வீட்!

    கொலையாளிகளை ஹிரோக்களாக ஆக்காதீர்கள் – திமுக எம்.பிக்கு கார்த்தி சிதம்பரம் ட்வீட்!

    இந்தியாவின் ஆறாவது பிரதமரான இராஜீவ் காந்தி, கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியன்று, தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த குண்டுவெடிப்பில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர். இக்கொலைவெறித் தாக்குதல் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இத்தாக்குதலுக்கு காரணமாக இருந்த பேரறிவாளன், நளினி மற்றும் முருகன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இவர்களின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், திமுக எம்.பி. செந்தில் குமாரின் ட்விட்டர் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக அமைச்சரவையில், முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு தற்போது சிறையிலிருக்கும் 7 பேருக்கும் விடுதலை அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், எந்த முடிவையும் எடுக்காமல், அப்படியே இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பியுள்ளார் ஆளுநர்.‌

    தமிழக அரசின் இந்த தீர்மானத்தில் ஆளுநர் முடிவெடுக்காத நிலையில், அவரை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது. மத்திய அரசின் சி.பி.ஐ., விசாரித்த இந்த வழக்கில், குற்றவாளிகளை விடுவிக்கின்ற அதிகாரம் எங்களுக்கு உள்ளது என, மத்திய அரசும், தமிழக அரசும் மாறி மாறி வாதிட்டன. இந்த வழக்கானது, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தேதியை குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தனர் நீதிபதிகள்.

    இந்த நிலையில், தர்மபுரி தொகுதி தி.மு.க., – எம்.பி.,யான செந்தில்குமார், தனது சமூக வலைதள பக்கங்களில், கைகளில் கிளியுடன் இருக்கும் குற்றவாளி பேரறிவாளன் படத்தை வெளியிட்டு, ‘அட்வான்ஸ் வாழ்த்துகள்’ என்று, தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாகத் தான் அளித்த பேட்டியின் காணொளியை, சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த கார்த்தி சிதம்பரம், “இராஜிவ் உடன் இறந்தவர்களைப் பற்றி, யாரும் பேசுவதில்லையே; கொலை குற்றவாளிகளை ஹீரோக்களாக ஆக்காதீர்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.

    இதில், திமுக எம்.பி. செந்தில்குமாரின் ட்விட்டர் இணைப்பையும் சேர்த்துள்ளார். இதைப் பார்த்து பகிர்ந்து வரும் காங்கிரஸ் கட்சியினர், “இவர் ஒருவராவது இராஜிவ் காந்திக்காக குரல் கொடுக்கிறாரே” என ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

    இவர்தான் இலங்கையின் புதிய பிரதமரா? கலவரங்கள் இனியாவது ஓயுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....