Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஐக்கிய அமீரகத்தின் முதல் பெண் இயக்குனரான நைலா அல் கைஜா-வுடன் கூட்டணி அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

    ஐக்கிய அமீரகத்தின் முதல் பெண் இயக்குனரான நைலா அல் கைஜா-வுடன் கூட்டணி அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

    “இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

    இவர் தற்போது அரேபிய பெண் இயக்குனர் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார் என்று சினிமா வாட்டரங்கள் தெரிவிக்கின்றன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது பல படங்களில் பிசியாக இசை அமைத்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

    மேலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார்.

    இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் ஐக்கிய அமீரகத்தின் முதல் பெண் இயக்குனரான நைலா அல் கைஜா உடன் கூட்டணி அமைக்கிறார். அவர் இயக்கும் பாப் என்ற படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

    “நைலா உடன் கூட்டணி அமைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குனர். பாப் திரைப்படம் உலகளவில் ரசிகர்களுடன் உணர்வுப்பூர்வமாகவும் காட்சி வடிவிலும் ஒன்றிப் போகக் கூடிய வகையில் உருவாகியுள்ளது.” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    துபாய் 2020 எக்ஸ்போவிற்காக ஏ.ஆர்.ரஹ்மான் துபாயில் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவை அமைத்தார். அதன் பிறகு தற்போது அரேபிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவின் ஆர்கெஸ்ட்ராவில் 23 அரபு நாடுகளைச் சேர்ந்த 50 பெண் இசைக்கலைஞர்கள் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.

    நீரிழிவில் இப்படியெல்லாம் இருக்கிறதா? – படியுங்கள்! கவனமாக இருங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....