Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமாறுவேடத்தில் வந்து காவலர்களுக்கு பெண் எஸ்பி வைத்த விபரீத டெஸ்ட்; என்ன நடந்தது தெரியுமா?

    மாறுவேடத்தில் வந்து காவலர்களுக்கு பெண் எஸ்பி வைத்த விபரீத டெஸ்ட்; என்ன நடந்தது தெரியுமா?

    உத்தர பிரதேச மாநிலத்தில் பொதுமக்களின் புகார்கள் மீது காவல்துறையினர் எவ்வளவு வேகமாக செயல்படுகின்றனர் என்பதை அறிய மாறுவேடத்தில் புகார் அளித்த பெண் ஐ.பி.எஸ் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    உத்தரபிரதேச மாநிலம் ஆவுரையா மாவட்டத்தின் எஸ்பியாக சாறு நிகம் என்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி பணியாற்றி வருகிறார். 

    இந்நிலையில் இவர், பொதுமக்களின் புகார்கள் மீது காவத்துறையினர் எவ்வளவுக்கு வேகமாக செயல்படுகின்றனர். எவ்வாறு அதைக் கையாளுகின்றனர் என்பதை அறிய ஒரு சிறிய திட்டத்தை அவர் செயல்படுத்தியுள்ளார். 

    அதன் பின் அவர், காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். அப்போது தன் பெயர் சரிதா சௌகான் என்றும், ஆவுரையா மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் வந்துக் கொண்டிருந்த போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சில மர்ம நபர்கள் வழிமறித்து ஆயுதத்தை காட்டி கொள்ளை அடித்து சென்றதாகவும் புகார் அளித்தார். 

    உடனே அவர் இருக்கும் இடத்தை காவல்துறையினர் கேட்டு 5 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

    அவர்கள் உடனே வருவதையே அறிந்த அவர், மாறுவேடத்தில் முகத்தில் துப்பட்டா கட்டிக்க கொண்டார். முகக்கவசம், கூலிங் கிளாஸ் போன்றவற்றை அணிந்து கொண்டார். 

    காவல்துறையினர் வந்ததும், நிகம் தன்னை மிரட்டி பணம் பறித்து சென்றதாக கூறி கதறி அழுதார். அப்போது காவல்துறையினர் விவரங்களை கேட்டறிந்தனர். பிறகு அந்தப்பகுதியில் சென்ற வாகனங்களை ஒரு மணி நேரமாக சோதனை நடத்தினர். 

    அந்தச் சமயம் வரை அழுது புலம்பியபடி இருந்த சாறு நிகம், ஒரு கட்டடத்தில் தனது முகக் கவசம் மற்றும் துப்பட்டாவை அகற்றியதைக் கண்ட காவல்துறையினர் ஆச்சர்யத்துடன் அதிர்ச்சி அடைந்தனர். 

    பிறகு உயர் அதிகாரியான அவருக்கு சலியூட் செய்தனர். அப்போது ஐபிஎஸ் அதிகாரி, வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட்ட காவல்துறையினரை பாராட்டினார். 

    இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

    இதையும் படிங்க: இடஒதுக்கீடு விஷயத்தில் திமுகவும், காங்கிரஸூம் இரட்டை வேடம் போடுகின்றன – அதிமுக காட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....