Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசேலம் வாழப்பாடியில் வங்காநரியை பிடித்துவந்து வினோத வழிபாடு!

    சேலம் வாழப்பாடியில் வங்காநரியை பிடித்துவந்து வினோத வழிபாடு!

    சேலம், வாழப்பாடியில் கிராம மக்கள் வங்காநரியை பிடித்து வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். 

    சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சின்னப்பனாயக்கன் பாளையம், பேளூர், பெத்தநாயக்கன் பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் நரியை வைத்து பொங்கலிடும் வினோத வழிபாடு காலம் காலமாக இருந்து வருகிறது. அதன்படி வனப்பகுதியில் இருந்து வங்காநரியை பிடித்து வந்து கோயிலை சுற்றி எடுத்து சென்று வழிபாடு செய்கின்றனர். 

    மேலும், தை மாத முதல் நாள் நரி முகத்தில் முழித்தால் விவசாயம் மற்றும் செல்வம் செழிக்கும் என்பதை அவ்வூர் மக்களின் ஐதிகம். 

    இதனிடையே, வனப்பகுதியில் இருந்து வங்காநரியை பிடித்து வரக்கூடாது என்றும் மீறினால் 5 லட்சம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் வனத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். 

    இந்நிலையில், விதிக்கப்பட்ட தடையை மீறியும் சிலர் வங்காநரியை பிடித்து வந்து கூண்டில் அடைத்து பூஜை செய்து, கோயிலை சுற்றி எடுத்து வந்து நடத்தினர். இந்த விழாவில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டதோடு வங்காநரியை ஆராத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். 

    மண்டல பூஜை நிறைவு; சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....