Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தனுஷின் 'வாத்தி' இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

    தனுஷின் ‘வாத்தி’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

    நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா வருகிற 4-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நடிகர் தனுஷ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில்,  சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், வாத்தி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா வருகிற 4-ஆம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 

    முன்னதாக, வாத்தி திரைப்படத்தில் இருந்து ‘வா வாத்தி’, ‘நாடோடி மன்னன்’ போன்ற பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    ‘என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன’ – விபத்து குறித்து விஜய் ஆண்டனி ட்விட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....