Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதேவர் ஜெயந்தி விழா: சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்

    தேவர் ஜெயந்தி விழா: சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்

    நாளை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அக்டோபர் 30-ம் தேதி நந்தனம் அண்ணசாலையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் தொண்டர்களுடன் திரண்டு வந்து மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்த உள்ளனர். 

    அதிகளவில் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் திரண்டு வருவர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, இதனை முன்னிட்டு சென்னை பெருநகர காவல்துறை தேவர் ஜெயந்தி விழா முடியும் வரை போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளது. 

    இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு  வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    அண்ணா சாலை:

    அண்ணா சாலையில் சைதாப்பேட்டையிலிருந்து நந்தனம் மற்றும் சேமியர்ஸ் சாலை நோக்கி வரக்கூடிய வாகனங்கள், அண்ணா சாலை மற்றும் இணைப்புச் சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்பி இணைப்புச் சாலை,மாடல் அட்மேன்ட் சாலை,வி.என்.சாலை, தெற்கு போக் சாலை, வடக்கு போக் சாலை, தியாகராய சாலை, எல்டாம்ஸ் சாலை, கே.பி.தாசன் சாலை வழியாக செல்லலாம்.

    அண்ணா சாலை தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள், அண்ணா சாலை, செனடாப் சாலை சந்திப்பில் திரும்பி ஜி.கே.மூப்பனார் மேம்பாலம் வழியாக கோட்டூர்புரம் பாலம், காந்தி மண்டபம் சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை வழியாக செல்லலாம்.

    ஜி.கே.மூப்பனார் மேம்பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு அண்ணா சாலை, செனடாப் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் கோட்டூர்புரம் நோக்கி அனுமதிக்கப்படும். கோட்டூர்புரத்தில் இருந்து அண்ணா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

    சேமியர்ஸ் சாலையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் டர்ன் புல்ஸ் சந்திப்பில் இருந்து செனடாப் சாலை சந்திப்பு,ஜி.கே.மூப்பனார் மேம்பாலம், காந்தி மண்டபம் சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, வழியாக செல்ல திருப்பிவிடப்படும். 

    தேவைப்பட்டால் மாற்றம்: 

    போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்: அண்ணா சாலையில் கிண்டியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் சின்னமலை சந்திப்பில் இருந்து நந்தனம் நோக்கி அனுமதிக்கப்படாமல் தாலுக்கா அலுவலக சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, காந்திமண்டபம் சாலை, கோட்டூர்புரம் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

    கத்திப்பாரா மேம்பாலத்தில் வரும் வாகனங்கள் சிப்பெட், அம்பாள் நகர்,காசி மேம்பாலம், வடபழனி,ஆற்காடு சாலை வழியாக அண்ணா சாலை நோக்கி செல்ல திருப்பிவிடப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: உலகக் கோப்பை அணிகள் ஆடுவதற்கா? மழை ஆடுவதற்கா? – தொடர்ந்து ஏமாற்றத்தில் ரசிகர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....