Friday, March 15, 2024
மேலும்
    Homeவரலாறு"செம்மொழியான நம் ஆதி தமிழ் மொழி" சிதைந்து போனதா..? தெரிந்துகொள்ள வேண்டிய சுவாரஷ்யமான தகவல்கள்

    “செம்மொழியான நம் ஆதி தமிழ் மொழி” சிதைந்து போனதா..? தெரிந்துகொள்ள வேண்டிய சுவாரஷ்யமான தகவல்கள்

    ஒருவனது மொழியை அவனது தாய்மொழி என்று
    அழைப்பது வெறும் அழகுக்காக அல்ல. அது பல்லாயிரம்
    தாயினும் சிறந்தது என்பதால்தான்!

    தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பல்லாயிரம் ஆண்டு வரலாறு இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். செம்மொழியான தமிழ் மொழியின் வரலாற்றை ஆராய்ந்தால் இந்த ஒரு யுகம் போதாது என்று சொன்னால் கூட மிகையாகாது.

    தமிழ் மொழியின் வரலாறு, உலகின் முதல் மனிதன் தோன்றிய இடமாக நம்பப்படும் குமரி கண்டத்தில் தொடங்கியது. தமிழர்கள் அந்த காலகட்டத்தில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர்.

    அவை…. தலைச்சங்கம், இடைச்சங்கம் , கடைச்சங்கம் ஆகும். அதே போல், தமிழின் பரிணாமங்களை வைத்து தமிழை 1. பழந்தமிழ் 2. இடைக்காலத்தமிழ் 3. தற்காலத்தமிழ் என வேறுபடுத்துகின்றனர்.

    வரலாற்று சான்றுகள்படி தமிழ் மொழி குறைந்தது 3000 வருடங்கள் தொன்மையானது, ஆனால் தமிழ் அறிஞர்களின் கருத்துப்படி தமிழ் மொழி கிட்டத்தட்ட 8000 வருடங்கள் தொன்மையானது என நம்பப்படுகிறது. இப்படியாக பல பெருமை பொருந்திய நம் தமிழ் மொழியில்… ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப சில அந்நிய மொழிகளும் ஊடுருவி விட்டது, அப்படியாக நம் அன்றாட வாழ்க்கையில் தமிழ் வார்த்தை என்று நினைத்து பயன்படுத்துகிற அந்நிய மொழிகளின் வார்த்தைகளையும், அந்த அர்த்தத்திற்கான உண்மையான தமிழ் வார்த்தைகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க !

    இதையும் படிங்க: குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது; உயர்நீதிமன்றம் காட்டம்

    இந்தப் பாடம் இனிக்கும் 20: செப்பும் மொழி எத்தனை? | tamil made easy - hindutamil.in

    1) ஆக்கிரமித்தல் என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை அதன் உண்மையான தமிழ் வார்த்தை என்னவென்றால் வலிந்து கைபற்றல் அல்லது வலிய கவர்தல் என்பவை ஆகும்

    2) ஆசிர்வாதம் செய்வது ஆசிர்வாதம் வாங்குவது என்ற வார்த்தைகள் நம் பேச்சு வழக்கில் உள்ளது ஆனால் ஆசிர்வாதம் என்பது தமிழ் வார்த்தை கிடையாது. சமஸ்கிருதத்தில் இருந்து தமிழில் ஊடுருவிய சொல்லாகும் அதன் பொருள்கொண்ட தமிழ் வார்த்தை ‘வாழ்த்து’ என்பதே!

    3) உணர்ச்சி பெருக்கின் சொல்லான ஆச்சரியம் என்பதும் சரியான தமிழ் வார்த்தை இல்லை அதுவும் ஒரு சம்ஸ்கிருத சொல்லாகும்., அதன் தமிழ் வார்த்தை வியப்பு என்பதாகும்.

    4) அதிகம் கோவப்படுபவர்களை ஆத்திரக்காரன் என்று சொல்வது உண்டு ஆனால் அதில் பாதி சமஸ்கிருதமும் பாதி தமிழும் உள்ளது . ஆத்திரம் என்பது சமஸ்கிருதம், காரன் என்பது தமிழ்.ஆத்திரக்காரனுக்கு ஈடான தமிழ் வார்த்தை என்னவென்றால் “விரைவு வினையன் அல்லது விரைவுச் சினத்தன்” ஆகும்

    5)நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தை வழக்கானா “உஷார் -ஆ போயிட்டு வா… உஷாரா இரு” என்பது தமிழ் மொழி சொல் இல்லை. உஷார் என்பது உருது மொழியை மூலமாக கொண்ட வார்த்தை அதன் பொருள் கொண்ட சரியான தமிழ் வார்த்தை கவனம், எச்சரிக்கை மற்றும் விழிப்பு போன்றவை ஆகும்.

    பெருமையான தமிழ் மொழி — தமிழ் தகவல் மையம்

    6)ஏதேனும் இலவசமாக கிடைத்தாலோ, அல்லது கொடுக்கப்பட்டாலோ அதை இக்கால மொழி வழக்கில் ‘ இனாமாக கிடத்தணு என்று சொல்லும் பழக்கம் இல்லது ஆனால் இனாம் என்ற சொல் ஒரு உருது மொழி சொல்லாகும், ஆற்காடு நவாப்புகள் மதிராசபட்டினம் எனப்படும் இப்போதைய சென்னையை ஆண்ட காலகட்டத்தில் தான் இந்த இனாம் என்ற சொல்ல தமிழர்கள் மத்தியில் ஊடுருவியது இதன் சரியான தமிழ் வார்த்தை நன்கொடை என்பதாகும்.

    இதையும் படிங்க: ஐ.நா. அமைப்பின் அலுவலக மொழிகளில் ஒன்றாக ஹிந்தி…கடும் முயற்சியில் இந்தியா!

    7) ஆடைகளை இஸ்திரி போடுவது என்பது தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு ஒரு சொல் தான் ஆனால் இஸ்திரி என்பது ஒரு உருது சொல், அதன் தமிழ் வார்த்தை தேய்ப்பம் அல்லது தேய்ப்புக்கருவி என்பதே ஆகும்.

    6) உண்ட உணவு ஜீரணம் ஆனதா? என அதிகம் பேசப்படும் ஜீரணம் என்ற வார்த்தை ஒரு வடசொல் ஆகும் செரிமாணம் என்பதே சரியான தமிழ் வார்த்தை.

    7) அதிகம் பணத்தை செலவழிப்பவர்களை ஊதாரி என்று சொல்வது உண்டு ஆனால் அது உண்மையில் என்ன மொழி சொல் என்பது தெரியாமல் நாம் பயன்படுத்தி வருகிறோம். ஊதாரி என்பது ஒரு சமஸ்கிருத மொழி சொல் அதன் தமிழ் சொல் மீச்செலவாளி அல்லது வீண்செலவுக்காரன் என்பன ஆகும்.

    8) நண்பர்கள் கூறும் பொய்யான புகழ்ச்சியுரைகளையோ, பொய்யான வார்த்தைகளையே குறிக்க “உடான்ஸ் விடாத” என நாம் அனைவரும் கூறுவது உண்டு ஆனால் அந்த வார்த்தை எந்த மொழியின் மூலம் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. உடான்ஸ் என்பது உருது மொழி சொல் அதை குறிக்கும் தமிழ்சொல் பகடிப் பொய் அல்லது விளையாட்டுரை ஆகும்

    9) ஒருவரின் உணர்ச்சி பெருக்கை சுட்டிக்காட்டும் சொல்லாக ஆதங்கம் என்னும் வார்த்தையை நாம் பயன்படுத்துகிறோம் ஆனால் அது ஒரு சம்ஸ்கிருத சொல் அதன் சரியான தமிழ் வார்த்தை மனப்பொருமல், ஆற்றாமை அல்லது மனவேக்காடு என்பனவே…

    10) உடலில் குறைபாடுகள் உள்ளவர்களை குறிக்க ஊனன் என்ற சமஸ்கிருத வார்த்தையை தமிழ் என்று நினைத்து இத்தனை காலங்களாக நாம் பயன்படுத்தி வருகிறோம் ஆனால் உடலில் குறையுள்ளவர்களை குறிக்கும் சரியான தமிழ் வார்த்தை முடவன் மற்றும் உடற்குறையாளி என்பவையே.

    The state language of civilization- Dinamani

    11) கர்வம் கொண்டவன் என்று கூறும் வழக்கில் கர்வம் என்பது சமஸ்கிருத சொல், அதன் பொருள் கொண்ட சரியான தமிழ் சொல் செருக்கு என்பதே ஆகும்.

    12) கோவிலில் கர்ப்பூரம் கொளுத்தி வழிபடுவது நம் பாரம்பரியம் ஆனால் கர்பூரம் என்பது ஒரு தமிழ் மொழி சொல் அல்ல, சமஸ்கிருதத்தை மூலமாக கொண்ட சொல்லாகும். அதன் சரியான தமிழ் சொல் சூடம் மற்றும் எரியணம் என்பதாகும்

    13) பிறரை தொந்தரவு செய்யும் செயலை கலாட்டா என நாம் சொல்வதுண்டு ஆனால் கலாட்டா என்பது ஒரு உருது மொழி சொல் அதன் சரியான தமிழ் சொல் கலவரம் மற்றும் கலகாட்டம் என்பதே.

    இப்படியாக, பல அந்நிய மொழி வார்த்தைகள் பல தமிழில் ஊடுருவி ‘தமிழ்’ ஒரு கலவை மொழியாக மாறிவிட்டது. ஆனால் தொல் தமிழின் பெருமையை அறிந்து நாம் செயல்பட வேண்டியது அவசியம்.

    சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே—அதைத்
    தொழுது படித்திடடி பாப்பா; என்று பாரதி கூறியதை நினைவில் கொண்டு நம் தாய்மொழி தமிழனுக்கு அயராது தொண்டு செய்வோம் !

    இதையும் படிங்க: “அதிக பணம் சம்பாதிப்பதற்காக நிறுவனத்தை வாங்கவில்லை”: எலான் மஸ்க் விளக்கம்..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....