Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதில்லி மகளிர் ஆணைய தலைவியை காரில் இழுத்து சென்ற நபர் கைது

    தில்லி மகளிர் ஆணைய தலைவியை காரில் இழுத்து சென்ற நபர் கைது

    தில்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக சென்ற மகளிர் ஆணைய தலைவியை காரில் இழுத்து சென்ற நபர் கைது செய்யப்பட்டார். 

    தலைநகர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகே மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இவருடன் குழுவும் இருந்தது. 

    அப்போது காரில் மதுபோதையில் இருந்த ஹரீஷ் என்று நபரை பிடிக்க முயன்றபோது அந்த நபர் விரைவாக காரின் ஜன்னல் கதவை மூடினார். அந்தச் சமயம் ஜன்னலில் ஸ்வாதி மாலிவாலின் கைகள் சிக்கிக் கொண்டன. பிறகு அந்த நிலைமையிலேயே தன்னை 15 மீட்டர் தூரம் இழுத்து சென்றதாகவும், கடவுள் தான் தன்னை காப்பாற்றியதாகவும் ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

    இதையடுத்து, ஹரீஷ் என்ற அந்த நபர் சென்ற கார் கண்காணிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தெற்கு தில்லியின் சங்கம் விஹாரைச் சேர்ந்த ஹரீஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டார். 

    இந்தச் சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தில்லி காவல்துறையிடம் அறிக்கை கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    உசைன் போல்ட்டின் கணக்கில் இருந்த 103 கோடி ரூபாய் மாயம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....