Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபுத்த மதத்திற்கு மாறிய தில்லி மாநில அமைச்சர்! வெடித்து சர்ச்சையானதால் பதவி ராஜினாமா

    புத்த மதத்திற்கு மாறிய தில்லி மாநில அமைச்சர்! வெடித்து சர்ச்சையானதால் பதவி ராஜினாமா

    தலைநகர் தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதமாற்ற நிகழ்ச்சியில் தில்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் கலந்து கொண்டார். 

    இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான மக்கள்  பௌத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியினர், கவுதமை பதவி நீக்கம் செய்யுமாறு கோரிக்கை வைத்தனர். 

    இதைத்தொடர்ந்து, வதோதராவில் நேற்று நடந்த ஆம் ஆத்மியின் ‘திரங்கா பேரணி’க்கு முன்னதாக ஆளும் பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மி கட்சி பேனர்களை கிழித்தனர். 

    இதையும் படிங்க:மன அழுத்தமாக இருந்தால் ஐபிஎல்-லில் விளையாடாதீர்கள்! வீரர்களுக்கு கபில் தேவ் அறிவுரை…

    இந்நிலையில், பாஜகவிடம் இருந்து எதிர்ப்பு அதிகரித்ததால், தில்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் இன்று தனது பதவியிலிருந்து விலகினார்.

    இதுதொடர்பாக அவர், “இன்று மகரிஷி வால்மீகியின் வெளிப்பாடு நாள் மற்றும் மான்யவர் கன்ஷி ராம் சாஹேப் அவர்களின் நினைவு நாள். அப்படியொரு நாளில் தற்செயலாக இன்று பல தடைகளில் இருந்து விடுபட்டுள்ளேன். 

    நான் இன்று மீண்டும் பிறந்துள்ளேன். இப்போது இன்னும் உறுதியாக, சமூகத்தின் மீதான உரிமைகளுக்காக மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக எந்த தடையுமின்றி உறுதியாக தொடர்ந்து போராடுவேன்” எனகூறியுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....