Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமன அழுத்தமாக இருந்தால் ஐபிஎல்-லில் விளையாடாதீர்கள்! வீரர்களுக்கு கபில் தேவ் அறிவுரை...

    மன அழுத்தமாக இருந்தால் ஐபிஎல்-லில் விளையாடாதீர்கள்! வீரர்களுக்கு கபில் தேவ் அறிவுரை…

    மூன்று வடிவங்களிலும் விளையாடுவது மன அழுத்தமாக இருந்தால் ஐ.பி.எல்.லில் ஆடாதீர்கள் என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார். 

    முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்ற அணியின் கேப்டனாக இருந்தவர் கபில் தேவ். இவர் ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட்டர்கள் மத்தியிலும் நன்மதிப்பை உடையவர். 

    இந்நிலையில் கபில்தேவ் வீரர்களின் மன அழுத்தம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக தொடர்ந்து ஒரு சில புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதனை சிலர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் சொல்லியதை நான் பார்த்துள்ளேன். அதனால் அவர்களுக்கு சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது. 3 வடிவங்களிலும் விளையாடுவது அழுத்தமாக இருந்தால் ஐ.பி.எல்-லில் ஆடாதீர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: கிரிக்கெட்டில் சாதித்த தோனி…இதிலும் சாதிப்பாரா?

    மேலும், அவர் பேசியதாவது:

    ஐபிஎல் விளையாடுவதால் வீரர்கள் மீது அதிக அளவு அழுத்தம் இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி என்றால் நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். அழுத்தத்தை உணரும் வீரர்கள் ஐபிஎல் விளையாட வேண்டாம். வீரர்கள் கிரிக்கெட் விளையாட்டை ரசித்து விளையாடினால் அங்கு அழுத்தம் இருக்காது. மன அளவிலான சோர்வு குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து, ரொம்ப அனுபவித்து விளையாடுவேன். அங்கு அழுத்தம் இருப்பதாக நான் உணர்ந்தது இல்லை. அதே தான் வீரர்களுக்கும். விளையாட்டை ரசித்து விளையாடினால் அழுத்தம் ஏதும் இருக்காது

    இவ்வாறு கபில்தேவ் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....