Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்களை மூடுங்கள் - எலான் மஸ்க் அதிரடி!

    இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்களை மூடுங்கள் – எலான் மஸ்க் அதிரடி!

    செலவின குறைப்பு நடவடிக்கையாக, இந்தியாவில் உள்ள மூன்று அலுவலகங்களில் இரண்டு ட்விட்டர் அலுவலகங்களை மூட எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை சமீபத்தில் வாங்கினார். இதன்மூலம், ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாக எலான் மஸ்க் உள்ளார். 

    இதைத்தொடர்ந்து, எலான் மஸ்க் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளை ட்விட்டர் நிறுவனத்திலும், தளத்திலும் நிகழ்த்தி வருகிறார். அவற்றில் பல சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக, ஆட்குறைப்பும், ப்ளுடிக் சம்பந்தமான அறிவிப்புகளும் பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்தன. 

    இந்நிலையில், இந்தியாவின் அரசியல் மையமான புது தில்லியில் உள்ள ட்விட்டர் அலுவலகம் மற்றும் நிதி வர்த்தக மையமான மும்பையில் உள்ள ட்விட்டர் அலுவலகம் போன்றவை மூடப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், பெங்களூரில் உள்ள ட்விட்டர் அலுவலகம் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தில்லி மற்றும் மும்பை அலுவலகங்களின் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்து வேலையை செய்யுமாறு ஊழியர்களுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ட்ரீட்; வெளிவந்த பாடல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....