Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபாலியல் வழக்க ரத்து செய்யனுமா ? குழந்தைகளுக்கு 'பர்கர்' வாங்கி கொடுங்கள்! இப்படியும் ஒரு தீர்ப்பு

    பாலியல் வழக்க ரத்து செய்யனுமா ? குழந்தைகளுக்கு ‘பர்கர்’ வாங்கி கொடுங்கள்! இப்படியும் ஒரு தீர்ப்பு

    ஒரு வழக்கில் இரண்டு அனாதை இல்லங்களுக்கு பர்கர்களை வழங்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ள உத்தரவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    பெண் ஒருவர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தனது முன்னாள் கணவர் மீது சில வருடங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், அந்தப் பெண்ணின் முன்னாள் கணவர் மனு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

    அந்த மனுவில், எனக்கும் தனது முன்னாள் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், இதனால் இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்தாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஜூலை 4-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு எட்டப்பட்டு இருவரும் சுமூகமாகப் பிரிந்துவிட்டோம். ஆதலால், தன் மீது புகார்களை ரத்து செய்யுமாறு அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

    இதையும் படிங்க: ‘அடடா’,.. என வியக்க வைக்கும் நடிகை த்ரிஷாவின் அழகிய பிரத்யேக புகைப்படங்கள்!

    அவரது முன்னாள் மனைவியும் வழக்கு ரத்து செய்வது குறித்து எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றம் புகாரை ரத்து செய்ய உத்தரவிட்டது. ஆனால், 2020-ல் இருந்து இந்த விவகாரம் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டு, இதற்காக காவல்துறை மற்றும் நீதித்துறையின் நேரம் வீண்டிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

    இதைத்தொடர்ந்து, குறைந்தது 100 குழந்தைகளைக் கொண்ட இரண்டு அனாதை இல்லங்களுக்கு பர்கர்களை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சுகாதாரமான முறையில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பர்கர்கள் தயாரிக்கப்பட்டு சப்ளே செய்வதை உறுதிப்படுத்த போலீசார் கண்காணிக்கவும் அவர் உத்தரவிட்டார். 

    இதை அவர் நிறைவேற்றினால் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்வதாகவும் இது தொடர்பான விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு நவம்பர் 21ஆம் தேதிக்கு வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அந்த நபர் இரு பர்கர் கடைகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....