Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்தேஜா வூ.. ஜமாய் வூ..இது மாயசக்தியா இல்லை எதிர்காலத்தை கணிக்கும் திறனா..?

    தேஜா வூ.. ஜமாய் வூ..இது மாயசக்தியா இல்லை எதிர்காலத்தை கணிக்கும் திறனா..?

    நீங்கள் ஒரு புதிதான இடத்திற்கு செல்லும் போது திடீரென அந்த இடத்தையும் அங்கு நடக்கும் குறிப்பிட்ட சம்பவங்களையும் ஏற்கனவே பார்த்ததுபோல ஒரு உணர்வு ஏற்படும். இதுமாதிரியான உணர்வுகளுக்கு மருத்துவ உலகில் தேஜா வூ என்று பெயர்.  இந்த தேஜா வூ என்பது உலகில் 80 சதவீத மக்களுக்கு ஏற்படும் ஒரு உணர்வு. இதை நம்மில் பலர் அனுபவித்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது.

    ஆனால் தேஜா வூ – என்பதற்கு நேர் எதிரான ஒரு உணர்வும் மனிதர்கள் மத்தியில் இருக்கதான் செய்கிறது… அதற்க்கு மருத்துவ உலகில் ஜமாய் வூ என்று பெயர்!

    ஜமாய் வூ என்றால் என்ன ?

    நாம் ஏற்கனவே பார்த்த, பழகிய ஒரு விஷயம் திடீரென பழக்கம் இல்லாதது போன்ற புதிதான ஒரு உணர்வை ஏற்படுத்தும். இதற்கு ஜமாய் வூ என்று பெயர் !

    இந்த ஜமாய்வு என்ற வார்த்தையை விஜய் நடித்த நண்பன் படத்தில் நாம் ஏற்கனவே கேட்டிருக்கிறோம்… அதில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியில் ” நமக்கெல்லாம் ஜமாய்-வு என்று நடிகர் சத்தியன் கூறி இருப்பார்.

    அது என்ன ஜமாய் வூ? அது எப்படி இருக்கும் ? எப்படி கண்டுபிடிப்பது என்ற பல கேள்விகள் உங்கள் மத்தியில் எழுந்திருக்கும். ஜமாய் வூ குறித்த சுவாரசியமான தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க!

    ஜமாய் வூ என்பதும் ஒரு பிரெஞ்சு மொழி சொல்லாகும் இதற்கு “பார்த்ததில்லை” என்பது பொருள்.

    நன்கு பார்த்து பழகிய நபர்கள், பெயர்கள், இடங்கள் போன்றவற்றை, திடீரென பார்க்கும் போது மறந்து விட்டதுபோல அல்லது முதல்முறை பார்ப்பது போன்ற உணர்வு ஒரு சில நொடிகளுக்கு ஏற்படும். அதன் பின்னர் பழைய நிலைமைக்கும் திரும்பும், இது போன்ற குழப்பனான மனநிலைக்கு தள்ளும் மூளையின் நிகழ்விற்கு ஜமாய்-வு என்று பெயர்.

    உதாரணமாக, நீங்கள் உங்கள் வீட்டில் நன்றாக தூங்கிவிட்டு, தூக்கம் களைந்து எழும்போது ஒரு சில வினாடிகள் நீங்கள் வேறு ஏதோ ஒரு தெரியாத வீட்டில் இருப்பது போல தோன்றும்… ஒருசில வினாடிகளில் அந்த உணர்வு போய் சாதாரண மனநிலை வந்து விடும்… இது போன்ற உணர்வை உலகில் 60 சதவீத மக்கள் உணர்கின்றனர்.

    இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்… நீங்கள் ஒரு பேருந்தில் உங்களுக்கு மிகவும் பழகிய ஒரு இடத்திற்கு பயணித்து செல்கிறீர்கள், அந்த இடம் வந்தவுடன் பேருந்தில் இருந்து இறங்கும் போது… திடீரென அது என்ன இடம் என்றே தெரியாதது போல ஒரு உணர்வு தோன்றும்… ஒரு சில நொடிகளில் அது சரியாகி பழகிய இடம் தான் என்ற உணர்வு வந்துவிடும் இதற்க்கு பெயர்தான் ஜமாய் வூ.

    ஜமாய் வூ ஏற்பட காரணமாக இருப்பது மூளையில் உள்ள டெம்போரல்-லோப் தான் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, ஏனெனில் மூளையின் இந்த பெரிய பகுதி, நினைவுகள் மற்றும் முகங்களை அடையாளம் காணும் செயல்களில் பெரிய பங்கு வகிக்கிறது.

    இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்… உங்கள் மூளை உங்கள் நியாபகம் மற்றும் நினைவுகளோடு ஒரு சில நொடிகள் விளையாடும் விளையாட்டு தான் ஜமாய் வூ.

    இந்த ஜமாய் வூ நிகழ்வை குறித்த ஒரு சர்வதேச ஆய்வு UK -வில் உள்ள Leeds பல்கலைகழகத்தில் Chris moulin என்ற ஆராச்சியாளரால் ஜமாய்-வு தூண்டல் என்ற தலைப்பில் நடத்தப்பட்டது, அந்த ஆய்வில் 90-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

    அதில், தன்னார்வலர்களை ஒரு நிமிடம் தொடர்ந்து door என்ற வார்த்தையை காகிதத்தில் எழுத வைத்தனர்…அப்போது 90-ல் 40 பேருக்கு அந்த வார்த்தை உண்மையிலேயே சரியான வார்த்தை தானா ? இது போன்ற ஒரு வார்த்தை உள்ளதா ? இது சரியான எழுத்து தானா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஒரு நிமிடம் எழுதி முடித்ததும் door என்பது அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கும் சாதாரண வார்த்தை தானே ஏன் இப்படி ஒரு உணர்வு வந்தது என குழம்பினர்.

    ஆம், அந்த ஆய்வில் நடந்த நிகழ்வு தான் ஜமாய் வூ , ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலமோ அல்லது அந்த வார்த்தையை எழுதுவதன் மூலமோ, அது உங்களுக்கு எல்லா அர்த்தத்தையும் இழக்கும் வரை அல்லது குறைந்தபட்சம் அது எப்படியாவது தவறானது அல்லது ஒரு வார்த்தையே அல்ல என்று நீங்கள் நினைக்கும் நிகழ்வை உங்கள் மூளை ஏற்படுத்தும்.

    ஜமாய்-வு தூண்டல் ஆய்வில் பங்குகொண்ட தன்னார்வலர்களிடம்… ஆய்வில் உணர்ந்த உணர்வுகளை குறித்து கேட்ட போது… ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் எழுத ஆரம்பித்ததும் இது சரியான வார்த்தையா ? இது என்ன மொழி ? இதற்க்கு என்ன பொருள் என்ற மிகவும் வினோத உணர்வுகள் எல்லாம் வந்தது என தெரிவித்தனர்.

    சமீபத்தில் Déjà Vu-ஐ அனுபவித்தவர்கள் ஜமாய் வூ அல்லது இதேபோன்ற நிகழ்வை உணர அதிக வாய்ப்புகள் பல தரப்பட்ட ஆராய்ச்சிகள் கூறுகிறது.

    மூளை ஒரு குறிப்பிட்ட செயலை மீண்டும் மீண்டும் செய்யும் போது… ஒரு இடத்தில் அது சோர்வடையும் அப்போது உணரும் நிகழ்வு தான் ஜமாய்வு என்று ஆராய்ச்சியாளர் மௌலின் கூறுகிறார்.

    இடங்களை, முகங்களை மறப்பதற்கு காரணம் “நீங்கள் எதையாவது நீண்ட நேரம் பார்த்தால், மனம் சோர்வடைந்து, அதன் அர்த்தத்தை இழக்கிறது” என்றும் மௌலின் கூறுகிறார்.

    ஜமாய் வூ பற்றி படிப்பது, schizophrenia or Capgras delusion போன்ற மாயையை உண்டாகும் மனநலக் கோளாறுகளை நன்கு புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று Chris moulie குறிப்பிடுகிறார்.

    மேலும் அவரது சமீபத்திய ஆய்வுகள் ஜமாய் வூ பதூண்டுவதையும், neural imaging பயன்படுத்தி மூளையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    எனவே தேஜா வூ மற்றும் ஜமாய் வூ இரண்டுமே மூளை நம்மோடு நிகழ்த்தும் ஒரு கண்ணாம்பூச்சி விளையாட்டு தானே தவிர, வேறு எந்த குறைபாடும் கிடையாது.

    இது போன்ற சுவாரசியமான தகவல்களை அன்றாடம் தெரிந்து கொள்ள தினவாசல் செய்திகளோடு இணைத்திருங்க !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....