Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்யானை லட்சுமி மரணம்; சாரை சாரையாக வந்து பால் ஊற்றி, கற்பூரம் ஏத்தி, மலர் தூவி...

    யானை லட்சுமி மரணம்; சாரை சாரையாக வந்து பால் ஊற்றி, கற்பூரம் ஏத்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்!

    புதுச்சேரியில் உயிரிழந்த மணக்குள விநாயகர் யானை லட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாரை சாரையாக வந்து பால் ஊற்றியும் கற்பூரம் ஏத்தியும் மலர் தூவியம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது. யானை லட்சுமியின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அஞ்சலி செலுத்திய பின்பு நகரப் பகுதியில் உள்ள ஜேவிஎஸ் நகர் அருகே வனத்துறை அருகே உள்ள ஒரு இடத்தில் யானையின் உடல் உடல்கூறு ஆய்வுகள் செய்யப்பட்டு நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை யானை லக்ஷ்மி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சாரை சாரையாக வந்து யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கற்பூரம் ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மேலும் ஒரு சில பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை யானை லட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் ஊற்றியும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தி வருகின்றனர். ஒரு மனிதனுக்கு எப்படி செய்வார்களோ அதுபோல் உயிரிழந்த கோவில் யானைக்கும் பொதுமக்கள் பால் ஊற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இனி விளம்பரம் கொடுப்ப? பாஸ்தா வேகாததற்கு 40 கோடி இழப்பீடு கேட்ட பெண்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....