Friday, March 22, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புகாலியாக உள்ள இளநிலை எழுத்தர், ஸ்டோர் கீப்பர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு! புதுச்சேரி அரசு

    காலியாக உள்ள இளநிலை எழுத்தர், ஸ்டோர் கீப்பர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு! புதுச்சேரி அரசு

    புதுச்சேரி அரசு துறையில் காலியாக உள்ள 165 இளநிலை எழுத்தர், 55 ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் தகுதி வாய்ந்த இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் காலியாக உள்ள 165 இளநிலை எழுத்தர் மற்றும் 55 ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்ப நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் வசிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையாக கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்ப கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் ஆங்கிலம் அல்லது தமிழ் அல்லது மலையாளம் அல்லது தெலுங்கில் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் 18 வயது முதல் 32 வயது உடையவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இதில் ஓபிசி, எம்பிசி, பிசிஎம், இபிசி பிடி ஆகிய பிரிவினருக்கு கூடுதலாக மூன்று ஆண்டுகளும், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இன்று காலை 10 மணி முதல் டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி மாலை 5:45 வரை https://recruitmentpy.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0413 – 2233228 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் வேலை; இளைஞர்களே முந்துங்கள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....