Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்கனமழையால் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு! திக்திக் நிமிடங்கள்

    கனமழையால் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கொடிய விஷமுள்ள பாம்பு! திக்திக் நிமிடங்கள்

    புதுச்சேரியில் வீட்டிற்குள் புகுந்த கொடிய விஷமுள்ள 5 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை பாம்பு பிடி வீரர் லாவகமாக பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தார்.

    புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை நெசவாளர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் நேற்று இரவு குடும்பத்தினர் தனது வீட்டில் இருந்தபோது கனமழை காரணமாக வீட்டிற்குள் சுமார் 5 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது. மிக நீளமான பாம்பை கண்டவுடன் வீட்டிலிருந்த அனைவரும் அலையடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    மேலும் இது குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதனிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடிக்கும் வீரர் நாகராஜ் வந்து நீண்ட நேரம் போராடி வீட்டுக்குள் பதுங்கி இருந்த 5 அடி நீளம் உள்ள கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அலையில் அடித்துச் செல்லப்பட்ட மீனவ வீடுகள்; ஒரே நாளில் அதிரடி முடிவெடுத்த ரங்கசாமி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....