Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தாதா சாகேப் பால்கே விருது யாருக்கு? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

    தாதா சாகேப் பால்கே விருது யாருக்கு? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

    பழம்பெரும் ஹிந்தி நடிகையான ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    இந்திய திரை உலகில் தன்னிகரில்லா சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு  ஆண்டு தோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது இந்திய திரை உலகினருக்கு கிடைக்கும் மிகப்பெரிய கவுரவமாகவும் அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது. 

    சத்தியஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே. பாலசந்தர் உள்ளிட்ட திரையுலக வானில் ஜொலித்த நட்சத்திரங்களுக்கு தாதா சாகேப் விருது கொடுத்து அரசு அவர்களை மேலும் பெருமை அடைய வைத்துள்ளது. 

    அந்த வகையில், பாலிவுட்டில் 1960 மற்றும் 70-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஜராத்தைச் சேர்ந்த ஆஷா ப்ரேக் என்ற பழம்பெரும் நடிகைக்கு 2020 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். 

    ஆஷா பரேக், 1952 முதல் 1999 வரை திரைத்துறையில் நடிகையாக பணியாற்றி வந்தார். மேலும் இவருக்கு 1992 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

    கடந்த ஆண்டுகளில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், வினோத் கன்னா ஆகியோருக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ‘ஐஸ் வாரியம்’ என்று பார்த்திபன் யாரை வர்ணித்தார்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....