Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகொரோனா பரவல்; புத்தாண்டையொட்டி அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகள்..

    கொரோனா பரவல்; புத்தாண்டையொட்டி அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகள்..

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்றவை அறிவுறுத்தப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பல நாடுகளிலும் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளன. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று அதிகமானதை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் பல நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 

    புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால் தமிழகத்தில் எம்மாதிரியான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட போகின்றன என்பது குறித்து பலரும் தங்களது கேள்விகளை முன்வைத்து வருகின்றன. 

    மற்றொரு புறம் கொரோனா காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை நிகழாண்டு மிகுந்த உற்சாகத்துடன் நடத்த நட்சத்திர உணவகங்களும், ரிசார்ட்டுகளும் பல முன்னெடுப்பை நிகழ்த்தி வருகின்றன, 

    இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினி உபயோகித்தல் உள்ளிட்டவை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், முழு அறிவுரை வெளிவரும் என எதிர்பார்க்க்ப்படுகிறது. 

    முன்னதாக, சீனாவிலிருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    புதுச்சேரியில் போராட்டம்; கடைகள் மூடல், பேருந்துகள் இயங்கவில்லை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....