Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதாம்பரத்தில் கிழக்கும் மேற்கும் இணைய மேம்பாலம் - வெளிவந்த தகவல்..

    தாம்பரத்தில் கிழக்கும் மேற்கும் இணைய மேம்பாலம் – வெளிவந்த தகவல்..

    சென்னை கிழக்கு – மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இன்று  நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. 

    அப்போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், கிழக்கு – மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

    அந்த குறிப்பில் , “2022 – 2023-ம் ஆண்டில் பெரிய மேற்கத்திய சாலையில் நெல்சன் மாணிக்கம் சந்திப்பு மற்றும் உள் வட்ட சாலையில் 2 இடங்களில் நடை மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு ரூ.30 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு ஆய்வு மற்றும் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகப்பேரில் டிஏவி பள்ளி மற்றும் வேலம்மாள் பள்ளி, கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

    பும்ராவுக்கு அணியில் இடம் உண்டா? இல்லையா? – குழப்பத்தில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....