Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமத்திய அமைச்சரை கேள்வியால் திணறடித்த காங்கிரஸ் மகளிர் அணி செயலர்! வலைதளங்களில் வைரல் ஆன வீடியோ!

    மத்திய அமைச்சரை கேள்வியால் திணறடித்த காங்கிரஸ் மகளிர் அணி செயலர்! வலைதளங்களில் வைரல் ஆன வீடியோ!

    மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று கௌகாத்தி விமானத்தில் பயணித்தபோது காங்கிரஸ் மகளிர் அணி செயலர் நேட்டா டி சௌசா கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். 

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று டெல்லி – கௌகாத்தி விமானத்தில் பயணம் செய்துள்ளார். இதில் காங்கிரஸ் மகளிர் அணி செயலர் நேட்டா டி சௌசாவும் பயணம் செய்துள்ளார். 

    அப்போது நேட்டா டி சௌசா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம் எண்டு கேள்வி எழுப்பியுள்ளார். 

    இதுகுறித்து வீடியோ பதிவு ஒன்றை நேட்டா டி சௌசா ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் சில வரிகளையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். 

    “மோடி அவையின் அமைச்சர் ஸ்மிருதி இரானி கௌகாத்தி வழியாக செல்லும்போது பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைவுயர்வு பற்றி கேட்கப்பட, அதற்கு ஸ்மிருதி இரானி அவர்கள், தடுப்பூசிகள், ரேஷன் மற்றும் ஏழை மக்களை காரணமாக கூறியுள்ளார் ” என்று நேட்டா டி சௌசா குறிப்பிட்டுள்ளார்.

    பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கும் போது வீடியோவில் இருவரும் பேசியது, 

    ஸ்மிருதி இரானி முதலில், காங்கிரஸ் தலைவர் வழி மறைப்பதாக கூறியுள்ளார். அடுத்து நேட்டா டி சௌசா, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்று கேட்டுள்ளார். அதற்கு இஸ்மிருதி இரானி ‘ஏன் இப்படி பொய் கூறுகிறீர்கள்’ என்று பதில் கூறியுள்ளார். 

    பின்பு இவர், சிறிது நேரம் கழித்து தான் குற்றம் சாட்டப்படுவதாக குறிப்பிடுகிறார்.

    மீண்டும் நேட்டா டி சௌசா கேட்ட அதே கேள்விக்கு ஸ்மிருதி இரானி, அரசாங்கத்தின் இலவச கோவிட் தடுப்பூசிகள், ரேஷன் என்று பேச்சை மாற்றியுள்ளார். 

    நேட்டா டி சௌசா கேட்டது, பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் அதிக விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பது ஆனால், ஸ்மிருதி இரானி பதில் அளித்தது அரசாங்கத்தின் இலவச கோவிட் தடுப்பூசிகள் என்று. 

    கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஸ்மிருதி இரானி சம்மந்தமே இல்லாத பதில்களை அளித்ததால் தற்போது இவரின் இந்த வீடியோ பதிவு சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....