Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது, ஆளும் திமுக அரசு! - ஓபிஎஸ் பகிரங்க பதிவு!

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது, ஆளும் திமுக அரசு! – ஓபிஎஸ் பகிரங்க பதிவு!

    “முப்பது வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளித்து, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க., வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, கல்லூரி மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணங்களை எல்லாம் இரண்டு மடங்கு, மும்மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது என்று அஇஅதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்நிகழ்வை  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்றும் விமர்ச்சித்துள்ளார்.

    கொரோனா தொற்று 

    கொரோனா தொற்று நோய் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூட உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக, பெரும்பாலான மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததுடன், வங்கிகள் மூலமாகவும், தனியார் நிதி நிறுவனங்கள் மூலமாகவும்,தனியாரிடமும் கடன் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தனர் என்றும் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

    மேலும், இரண்டாவது அலை, மூன்றாவது அலை காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் முடப்பட்டு, இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன என்றும், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து தற்போதுதான் ஓரளவு இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. அனைவரும் பணிக்குச் செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றும் தன் அறிக்கையில் பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

    இயல்பு நிலை திரும்பினாலும், மக்களுடைய வாழ்க்கை இயல்பான நிலையை அடைய மேலும் ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்கின்ற நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் ஏழையெளிய மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான கட்டணங்கள் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும், சில இனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த உயர்வுக்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார். 

    போராட்டங்கள் 

    இந்த உயர்வுகளைக் கண்டித்து தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதேபோன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மன்னை ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கல்லூரி வளாகத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இதோடு, பெரும்பாலான மாணவ, மாணவியர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, இதனை மறுபரிசீலனை , செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிற நிலையில், இந்தத் தேர்வுக் கட்டண உயர்வு என்பது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும்  நீட்டிக்கப்படும் என்ற அச்சமும் தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவியர் – மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தற்போது நிலவுவதாக பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியரின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று நோயினால் ஏற்பட்ட பாதிப்பினைக் கருத்தில் கொண்டும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்து கட்டண உயர்வையும் உடனடியாக ரத்து செய்யவும், இனி வருங்காலங்களில் பிற பல்கலைக்கழகங்களில் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியிடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாகவும் தன் அறிக்கையில் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....