Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்விளையாட்டுதோல்விப்பாதையில் இருந்து திரும்பிய ஹைதராபாத் ; வெற்றியால் மிரட்டும் குஜராத் - வெல்லப்போவது யார்?

  தோல்விப்பாதையில் இருந்து திரும்பிய ஹைதராபாத் ; வெற்றியால் மிரட்டும் குஜராத் – வெல்லப்போவது யார்?

  நிகழ்ந்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில், இன்று 21 ஆவது போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில்  ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. 

  தொடர்ந்து தோல்விப்பாதையில் சென்றுக்கொண்டிருந்த ஹைதராபாத் அணியானது கடந்தப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து தனது முதல் வெற்றியை ருசித்தது. இந்த வெற்றிப்பயணம் தொடரும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

  ஆம்! தோல்வியடைந்த போட்டிகளில் சொதப்பிய ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு தற்போது மீண்டும் வீரியத்தின் பக்கம் திரும்பியுள்ளது. பேட்டிங்கிலும் கடந்த போட்டியில் நல்ல ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இதனால் ஹைதராபாத் அணிக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது. 

  ஆனால், ஹைதராபாத் அணிக்கு பிறந்திருக்கும் புது நம்பிக்கையை உடைக்கும் வகையில் உள்ளதுதான், குஐராத் டைட்டன்ஸ். யார் சொதப்பினாலும் இன்னொருவர் அதை ஈடுகட்டிவிடுவர் என்ற எண்ணத்தை குஜராத் தன்வசம் கொண்டுள்ளது. 

  பந்துவீச்சில் ஷமி ஒருபக்கம் கலக்க, மற்றொரு புறம் ரஷித்கான், பெர்குசனும் கலக்குகிறார்கள். பேட்டிங்கில் சுப்மன்கில் மீப்பெறும் நம்பிக்கையை அளித்து வருகிறார். திவாட்டியா கடந்த போட்டியில் நிகழ்த்திய அதிரடியை எவராலும் எளிதில் மறக்க இயலாது. 

  குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ள இப்போட்டியானது மும்பையில் உள்ள டி. ஓய். பாட்டில் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. 

  டி. ஓய். பாட்டில் மைதானத்தை பொறுத்தவரை வெவ்வெறான ஸ்கோர்களை தருவதாகத்தான் உள்ளது. ஆகவே, பெறும்பாலும் டாஸ் வெல்பவர்கள் பந்துவீச்சைத் தேர்வு செய்வர் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

  வீரர்களின் பட்டியல்..

  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள்; அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கே), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், டி நடராஜன், உம்ரான் மாலிக்/கார்த்திக் தியாகி.

  குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்; ஷுப்மன் கில், மேத்யூ வேட் , சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....