Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்காமெடி நடிகர் போண்டா மணிக்கு உடல்நல குறைவு; இப்போது உடல்நலன் எப்படி இருக்கிறது?

    காமெடி நடிகர் போண்டா மணிக்கு உடல்நல குறைவு; இப்போது உடல்நலன் எப்படி இருக்கிறது?

    தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் போண்டா மணி. சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை, குசேலன், படிக்காதவன் உள்ளிட்ட 100ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இவர் வடிவேலு மற்றும் விவேக் உடன் பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார். சுந்தரா ட்ராவல்ஸ் மாப்பிள்ளை காமெடி, கல்யாணத்தை திருட சீப்பு திருடும் காமெடி என போண்டா மணி எக்கச்சக்க காமெடி காட்சிகளில் நடித்து இருக்கிறார்.

    குறிப்பாக வடிவேலுடன் இவர் நடித்த காட்சிகள் ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்பட்டது. அத்துடன் அதிமுக சார்பாக தேர்தல் சமயங்களில் பிரச்சாரத்திலும் இவர் ஈடுபட்டு வந்தார்.

    இலங்கையை சேர்ந்த போண்டா மணியின் இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும். இவருடன் 16 பேர் பிறந்த நிலையில் அவர்களில் 8 பேர் இலங்கையில் கலவரத்தின்போது உயிரிழந்தனர்.

    திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக போண்டா மணி பாண்டிபஜாரில் வாட்ச் மேன் பணியில் சிறிது காலம் இருந்துள்ளார்.

    இதய கோளாறு காரணமாக போண்டா மணிக்கு இன்று உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    சினிமாவிற்கு வாய்ப்பு தேடும்போது போண்டா, தண்ணீரை குடித்தே பசியாற்றிக் கொள்வாராம். இதனை அறிந்த இயக்குனர் வி. சேகர், கேதீஸ்வரன் என்ற பெயரை போண்டா மணி என்று மாற்றியமைத்துள்ளார்.

    மேலும், நடிகர் போண்டா விரைவில் குணமடைய ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர். இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விசா முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக உத்தரவு..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....