Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இராணி மேரி கல்லூரியில் மாணவிகள் தங்கி பயில விடுதி கட்டப்படும்- முதல்வர் ஸ்டாலின்

    இராணி மேரி கல்லூரியில் மாணவிகள் தங்கி பயில விடுதி கட்டப்படும்- முதல்வர் ஸ்டாலின்

    சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள இராணி மேரிக் கல்லூரியில் நடைபெற்ற 104-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முதல்நிலை பெற்ற மாணவிகளுக்கு பட்டச்சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.

    இராணி மேரிக் கல்லூரி பொன்விழாக் கலையரங்கில் 20-21 மற்றும் 21-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.3 மொழி துறைகள் ( பிரெஞ்சு, உருது, ஹிந்தி ) உட்பட 21 துறைகளில் இளநிலை(UG) பட்டம் முடித்த 2702 மாணவிகள் , 15 துறைகளில் முதுநிலை (PG) பட்டம் முடித்த 473 மாணவிகள், ஆய்வியல் நிறைஞர் (M.Phil) முடித்த 84 மாணவிகள் என மொத்தம் 3259 மாணவிகள் பட்டம் பெற்றனர்.

    இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண் கல்விக்காக தி.மு.க அரசு தீட்டிய திட்டங்கள் என்ன? என்பது பற்றி விரிவாக பேசினார். அப்போது இராணி மேரி கல்லூரியில் மாணவிகள் தங்கி பயில விடுதி கட்டப்படும் என்றும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் சில வாக்குறுதிகளையும் அளித்து உரையாற்றினார்.

    இராணி மேரிக் கல்லூரியை இடிக்க சொன்னவர் ஜெயலலிதா- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....