Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளியானது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி...

    வெளியானது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி…

    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான், ‘பிரின்ஸ்’.  தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.

    மேலும், இந்த திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

    முன்னதாக பிரின்ஸ் திரைப்படத்தில் இருந்து பிம்பிலாக்கி பிலாப்பி மற்றும் ஜெஸ்ஸிகா பாடல்கள் வெளிவந்துள்ளது. இப்பாடல்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. 

     இந்நிலையில், தற்போது பிரின்ஸ் திரைப்படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு அறிவித்திருக்கிறது . தீபாவளி வெளியிடாக இத்திரைப்படம் வெளிவரவுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

    இதையும் படிங்க:மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் தாயகம் திரும்பினர்-அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....